fbpx
Homeபிற செய்திகள்6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உடன் எம்ஜி மோட்டார் இசட்எஸ் இவி அறிமுகம்

6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உடன் எம்ஜி மோட்டார் இசட்எஸ் இவி அறிமுகம்

உலகளவில் வெற்றிகரமாகத் திகழும் எம்ஜி மோட்டார் இந்தியா, தனது புத்தம் புதிய இசட்எஸ் இவி (ZS EV)யின் வெளியீட்டை அறிவித்தது.

புதிய இசட்எஸ் இவி ஒரே சார்ஜில் சான்றளிக்கப்பட்ட 461 கிமீ தொலைவு பய ணத்தை வழங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு மிகப்பெரிய 50.3 kWh பேட்டரியுடன் வருகிறது.

புதிய இசட்எஸ் இவி 2 வெவ்வேறு வகைகளில் (எக்ஸைட், எக்ஸ்க்ளூசிவ்) முறையே இந்திய ரூ.21,99,800 மற்றும் 25,88,000 விலை மதிப்பில் கிடைக்கிறது.

எக்ஸ்க்ளூசிவ் வகை மாடலுக்கான முன்பதிவுகள் இப்போதே தொடங்கும் அதே வேளையில், எக்ஸைட் வகை மாடலுக்கான முன்பதிவு ஜூலை 2022 முதல் தொடங்கும்.

கவர்ச்சிகரமான வெளிப்புற வடிவமைப்பு கூறுகளோடு, வசதியான மற்றும் மேம்பட்ட மதிப்புடனான டூயல் பேன் பனோரமிக் ஸ்கைரூஃப், டிஜிட்டல் புளூடூத் டி கீ, ரியர் டிரைவ் அசிஸ்ட், 360° கேமரா, அத்துடன் ஹில் டிசெண்ட்(மலை இறக்கப்பாதை) கண்ட்ரோல் மற்றும் இன்னும் 75+க்கும் அதிகமான பல சிறப்பம்சங்கள் அடங்கியi-SMART ஆகிய இதன் வகைகளிலேயே முதன்மையாக விளங்கும் உட்புற சிறப்பு அம்சங்களோடு இசட்எஸ் இவி வருகிறது.

தீ, மோதல், தூசு, புகை போன்ற இன்னும் பல 8 சிறப்பு பாதுகாப்பு சோத னைகளை வெற்றிகரமாக கடந்து உலக அளவில் சான்றளிக்கப்பட்ட (ASIL-D, IP69K, UL2580) பேட்டரியோடு வருகிறது.

பெர்ரிஸ் ஒயிட், கரண்ட் ரெட், அஷேன் சில்வர் மற்றும் சேபிள் பிளாக் ஆகிய 4 வெளிப்புற வண்ணங்களில் இந்த கார் கிடைக்கிறது.

தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி இஷீல்ட் (MG eShield) பாது காப்பின் கீழ் புதிய இசட்எஸ் இவி வழங்கப்படுகிறது.

இதன் ஆட்டோமேக்கர் வரம்பற்ற கிலோமீட்டர் பயணத்திற்கு 5-ஆண்டு காலத்திற்கும், பேட்டரி பேக் அமைப்புக்கு 8 ஆண்டுகள் / 1.5 லட்சம் கிமீ அளவில் இலவச ஈட்டுறுதியை வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img