Home தமிழ்நாடு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு திட்டத்தின் மூலம் மருத்துவராகும்தூத்துக்குடி மாவட்ட விவசாய குடும்ப மாணவிகள், முதல்வருக்கு...

7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு திட்டத்தின் மூலம் மருத்துவராகும்தூத்துக்குடி மாவட்ட விவசாய குடும்ப மாணவிகள், முதல்வருக்கு நன்றி

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத் தில் உள்ள ஏழை, ஏளிய மாணவ, மாணவியர்களின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத் தினார்கள். குறிப்பாக கல்வியறிவில் சிறந்து விளங்கினால்தான் பொருளா தாரம் முன்னேற்றமடைந்து முதன்மை மாநிலமாக திகழும் என் பதை உணர்ந்து பள்ளி கல்வித்துறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, விலையில்லா காலணிகள், விலையில்லா மடிக்கணிணி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி சிறந்த கல்வி பெறுவதற்கு வழிவகை செய்து மாணவ, மாணவியர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்கள்.
அம்மா அவர்களின் வழியில் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் பள்ளி கல்வித்துறை மூலம் மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் கள். இருப்பினும் அரசு பள்ளி மாண வர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
இந்நிலையை மாற்றுவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று அவர்களின் மருத்துவராகும் கனவுகள் நிறைவேற வேண்டும் என்ற இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் சதவீதம் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
முதலமைச்சர் அவர்கள், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் இடங்கள் கிடைக்க சட்டம் இயற்றி இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி அரசு மற்றும் சுய நிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 313 மருத்துவ படிப்பு (எம்.பி.பி.எஸ்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் 92 பல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 405 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும், கட்டணம் செலுத்த முடியாத வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் நலன்கருதி குறிப்பாக சுயநிதி கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துவிட்டு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்கள், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே செலுத்தும் என்ற மகத்தான அறிவிப்பினையும் அறிவித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தினால் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த மருத்துக்கல்வி இனி சாமானியர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்துள்ளார்கள். பணக்காரர்களின் குழந்தைகள் மட்டுமே மருத்துவர்கள் ஆகும் நிலை இருந்த நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்; பாமர மக்களின் பிள்ளைகளும் மருத்துவர்கள் ஆவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மருத்துவ கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிககள் 4 பேருக்கு மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மருத்துவ கனவு நிறைவேறிய தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த மாணவி ஆயிஷா சைனீரா கூறியதாவது:
எனது தந்தை சையது முகமது புகாரி, தாய் சுமைய்யா. எனது தந்தை செல்போன் கடையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை செய்ததால் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். எனது தந்தையின் குறைவான வருமானத்தில்தான் நாங்கள் குடும்ப செலவினை மேற்கொண்டு வந்தோம். ஆனால் தற்போது அந்த வருமானமும் இல்லாததால் எனது சகோதரரின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். நான் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தேன்.
நான் பிளஸ் 2 தேர்வில் 504 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு சிறு வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் என்னுடைய குடும்பத்தின் வறுமை அதற்கு தடைக்கல்லாக இருந்தது. எனினும் நான் தொடர்ந்து படித்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வுக்கு தயாராகி வந்தேன். நான் நீட் தேர்வு பயிற்சிக்காக எங்கும் செல்லவில்லை. வீட்டில் இருந்தே கடினமாக முயற்சி செய்து படித்து நீட் தேர்வில் 246 மதிப்பெண்கள் பெற்றேன்.
நீட் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்குமா என்ற கவலையில் இருந்தேன். இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு வழங்கும் மகத்தான திட்டத்தினை அறிவித்தார்கள். இதன் மூலம் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் மருத்துவ கல்லூரியில் சேரமுடியுமா என்ற அச்சத்தில் இருந்த எனக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் என்னைப்போன்ற ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் மருத்துவ கனவை நனவாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்திட்டத்தின்கீழ் மருத்துவ கனவு நிறைவேறிய தூத்துக்குடி மாவட் டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த மாணவி சர்மிளா கூறியதாவது:
எனது தந்தை சுடலைமணி, தாய் அமுதா. எனக்கு 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் படித்து வருகிறோம். நானும் சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் படித்தேன். எனது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்களின் குறைவான வருமானத்தில்தான் நாங்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எனக்கு சிறுவயதில் இருந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது.
விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எவ்வாறு மருத்துவராக முடியும் என எனது குடும்பத்தின் வறுமை என்னை வாட்டியது. வறுமையோடு போராடினாலும் நான் மனம் தளராமல் மருத்துவ கல்வியை எப்படியாவது பெற வேண்டும் என்று கடின முயற்சி செய்து படித்து வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். ஆனால் தொடர்ந்து படிக்க பொருளாதார வசதி இல்லாததால் வீட்டில் இருந்து படித்து தற்போது நீட் தேர்வில் பெற்றி பெற்றுள்ளேன். நீட் தேர்வில் 211 மதிப்பெண்கள் பெற்றேன். இதனால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் பயில 7.5 உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தினால் எனக்கு சென்னையில் பல் மருத்துவப்படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு மூலம் விவசாய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர்களும் மருத்துவர்களாகும் வாய்ப்பை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்திட்டத்தின்கீழ் மருத்துவ கனவு நிறைவேறிய தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டியை சேர்ந்த மாணவி சுதா கூறியதாவது:
எனது தந்தை பேயாண்டி, தாய்சுந்தரி. எனக்கு 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளார்கள். நான் வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தேன். எனது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்களின் குறைந்த வருமானத்தில்தான் நாங்கள் வறுமை நிலையிலும் நாங்கள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தோம். நாங்கள் அரசு பள்ளியில் படித்தாலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசால் வழங்கப்படும் விலையில்லா புத்தகங்கள், விலையில்லா மடிக்கணிணி உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களையும் பெற்று சிறப்பான கல்வி எங்களுக்கு கிடைத்தது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் நான் பிளஸ் 2 தேர்வில் 434 மதிப்பெண்கள் பெற்றேன்.
அவசர சிகிச்சைகளுக்கே நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அரசு மருத்துவ மனைகளில்தான் சிகிச்சை பெறும் நிலையில் இருந்தோம். இதனால் மருத்துவர்களை பார்க்கும்போது நாமும் மருத்துவராகி நம்மைப்போன்ற ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையினை அளிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சிறு வயதில் இருந்தே இருந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வசதி படைத்தவர்கள் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற்று வந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவம் பயில வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளிலும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்கள். தமிழக அரசின் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி நான் அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் 264 மதிப்பெண்கள் பெற்றேன். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா, அவ்வாறு இடம் கிடைத்தாலும் உரிய கட்டணங்களை செலுத்தமுடியாதே என்ற கவலையில் இருந்தேன்.
இந்நிலையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மற்றும் அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்தும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னதமான அறிவிப்பினை நான் கடவுள் எனக்கு தந்த வரமாகவே கருதுகிறேன். இத்திட்டத்தின் மூலம் எனக்கு தேனி மருத்துவ கல்லூரியில் மருத்துவப்படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. என்னைப்போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களும் மருத்துவர்களாகும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இதேபோல இத்திட்டத்தின்கீழ் மருத்துவ கனவு நிறைவேறிய தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மகராஜா,& முத்துலெட்சுமி தம்பதியின் மகள் மாணவி வேல்மதியும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
தொகுப்பு:
வெ.சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தூத்துக்குடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...