55 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியில் பயின்ற மாணவர்கள், கரூரில் ஒன்று கூடி நினைவுகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்தனர்.
கரூர் ஈரோடு ஐஎம்ஏ மஹாலில் நடந்த விழாவுக்கு, முன்னாள் உடற் கல்வி இயக்குனர் தஞ்சாவூர் செல்வராஜ் தலை மை வகித்தார்.
சென்னை ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 55 ஆண் டுகளுக்கு முன்னர் 80 மாணவ, மாண விகள் பயின்றனர்.
இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் 70 வய தை தாண்டியவர்கள் என்பது குறிப்பி டத்தக்கது.
ஒவ்வொருவரும் பேரன், பேத்திகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். பயின்ற நாட்களையும் பசுமையான நினைவுகளையும் ஒவ்வொ ருவரும் பகிர்ந்து கொண்டனர்.
80 வயதைத் தாண்டிய மூவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்காக முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ஐடிஎப் டென்னிஸ் கோச் கே.ஜி. ராஜன் அனைவரையும் ஒருங் கிணைத்தார்.
சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற கரூர் டெக்ஸ்டைல் பார்க் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து கைத்தறி துணிகளை வழங்கி பேசும்போது, அனைவரும் உடற்கல்வி ஆசிரியர்கள் என்றாலும், தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை தவறாமல் செய்து வாருங்கள் என்றார்.
கட்டிட பொறியாளர் புலியூர் குமார் கவிதை வாசித்தார்.
என்எல்சி முன்னாள் இயக்குனர் கந்தசாமி, முன்னாள் வேளாண் துறை இணை இயக்குனர் ஆறுமுகம், முன்னாள் தலைமையாசிரியர் நடராஜன், கரூர் சேரன் உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் அமுதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கிருஷ்ணகிரி உடற்கல்வி முன்னாள் இயக்குனர் பெரியண்ணன், கரூர் உடற் கல்வி முன்னாள் இயக்குனர் கரூர் ராஜன் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங் கினர்.
மறைந்த முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் விருதுநகர் அழகிரிசாமி, மயிலாடுதுறை தமிழரசன், தஞ்சாவூர் மணவழகி, தேனி சாரதா, கன்னியாகுமரி டோர்கால், சேலம் சின்னசாமி, பேராவூரணி குமரவேல், நாமக்கல் மோக னாம்பாள், பர்கூர் செல்வம் ஆகியோரது புகைப்படம் திறக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் உடற்கல்வி இயக்குனர் திருவையாறு தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியை கரூர் மாவட்ட பிரஸ் கிளப் தலைவர் எம்.ஏ.ஸ்காட் தங்க வேல் தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை தஞ்சாவூர் செல்வராஜ், நாமக்கல் ஜெயபால், அயோத்தியா பட்டினம் கோவிந்தராஜ், திருவையாறு தட்சிணாமூர்த்தி, கோவை லட்சுமி, ஜெயலட்சுமி, கரூர் ராஜன், கிருஷ்ணகிரி பெரியண்ணன் உள்ளிட்டோர் செய்திருந் தனர்.