கோவை சவுரிபாளையம் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் 52 வது அசனப் பண்டிகை மற்றும் 36வது பிரதிஷ்டை பண்டிகை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பாதிரியார் ஜான் ஆசிர் ஜெபஸ் முன்னிலையில் அசனம் என்கிற அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக டெய்ஸி முத்துச்செல்வன் நற்செய்தி வழங்கினார். ஏற்பாடுகளை பொருளாளர் எஸ்.கிங்ஸ்லி, செயலாளர் ஓ.கே.பால்ராஜ் மற்றும் போதக சேகரக்குழுவினர் செய்திருந்தனர்.