fbpx
Homeபிற செய்திகள்5 மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 273 மனுக்கள் 207 மனு மீது முன்னுரிமை அடிப்படையில்...

5 மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 273 மனுக்கள் 207 மனு மீது முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை- கோவை மேயர் கல்பனா தகவல்

கோவை மாநகராட்சியில் இதுவரை நடைபெற்ற 5 மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 273 மனுக்களில் 207 மனுக்கள் மீது உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று (செப்.6) நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேயர் கல்பனா ஆனந்த குமார் தலைமை தாங்கி, மனுக் களைப் பெற்றுக் கொண்டார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.

கிழக்கு மண்டலத்தில் 3 மனுக்கள், மேற்கு மண்டலத் தில் 2, வடக்கு மண்டலத்தில் 6, தெற்கு மண்டலத்தில் 7, மத்திய மண்டலத்தில் 6, பிர தான அலுவலகத்தில் 10 மனுக்கள் என மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். கடந்த ஜூலை 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெற்ற 5 மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 273 மனுக்களில் 207 மனுக்கள் மீது உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீதமுள்ள 66 மனுக்கள் மீது பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப் படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் கல்பனா தெரிவித்தார்.
துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் முன் னிலை வகித்தார்.

மாநகராட்சி ஆணையாளர் (பொ) மரு.மோ.ஷர்மிளா, மண்டல உதவி ஆணையர்கள் அண்ணாதுரை, மோகனசுந்தரி, சேகர், முத்து இராமலிங்கம், உதவி ஆணையர் (கணக்கு) சுந்தர்ராஜ், உதவி ஆணையர் (நிர்வாகம்) சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில் பாஸ்கர், கருப்பசாமி, புவனேஸ்வரி, ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img