fbpx
Homeபிற செய்திகள்கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர்.
வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த நில உரிமையாளர் சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி (40), விவசாய கூலி வேலைக்கு வந்திருந்த கழுதூர் கிராமத்தை சேர்ந்த வேலு மனைவி கனிதா (35), ராமசாமி மனைவி பாரிஜாதம் (40), அர்ச்சுனன் மகள் சின்னபொண்ணு என்கிற ராஜேஸ்வரி (41) ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர்.
மேலும், மின்னல் தாக்கியதில் கழுதூரைச் சேர்ந்த கதிரவன் மனைவி தவமணி (32) என்பவர் மயக் கமடைந்து விளைநிலத்தில் கிடந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்து வமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது.

தகவலறிந்து வந்த போலீஸார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பார்வையிழந்த தவமணி வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img