Home பிற செய்திகள் இந்தியாவில் ஆடி க்யூ2 புது மாடல் காருக்கு முன்பதிவு துவக்கம்

இந்தியாவில் ஆடி க்யூ2 புது மாடல் காருக்கு முன்பதிவு துவக்கம்

ஆடி நிறுவனத்தின் புது மாடல் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ2 எஸ்யுவி மாடலுக்கான டீசரை செப்டம்பர் மாத வாக்கில் வெளியிட்டது. அந்த வரிசையில், தற்சமயம் புது மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. புதிய கியூ2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பயனர்கள் புதிய கார் முன்பதிவை ஆடி அதிகாரப்பூர்வ விற்பனை மையம் அல்லது வலைதளத்தில் மேற்கொள்ள முடியும். புதிய கியூ2 மாடல் 2020 ஆண்டில் ஆடி வெளியிடும் ஐந்தாவது கார் ஆகும்.
கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.
ஆடி கியூ2 மாடல் கார், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் குவாட்ரோ தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. 6.5 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.
இநத காரை முன்பதிவு செய்பவர்களுக்கு 5 ஆண்டுக்கான விரிவான சர்வீஸ், 2 பிளஸ் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் சாலையோர உதவி வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

பாரெவர்மார்க் ஐகான் புதிய வைர நகை கலெக்ஷன்

டி பியர்ஸ் குழுமத்தின் வைர பிராண்டான பாரெ வர்மார்க், பாரெவர்மார்க் ஐகான் ல் கலெக்ஷன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இது இந்த பிராண் டின் தனித்துவமான ஐகான் ஆகும்....

கோவையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்

கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும், தாமதமான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை...

உலக கல்லீரல் தினம் – விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப் கருவி அறிமுகம்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கோவை, திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் புதியதாக தென்னிந்தியாவில் முதன்முறையாக “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட்; எக்ஸாம் அண்டு பாட்கேப்” என்னும்...

டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

இந்தியாவில் முதன் மையான 10 ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான டெய்ரி டே, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹா ராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரியின் விரிவான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உலக கல்லீரல் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மக்களிடைய கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான கல்லீரலை...