கோவை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 37வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில், அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். மாணவர் மன்றத்தலைவர் எம்.வர்ஷினி வரவேற்றுப் பேசினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
பாரதியார் பல்கலைக்கழகப்பதிவாளர் (பொ) ரூபா குணசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “புதிய சிந்தனைகள் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப இடை வெளியை நிரப்பலாம்“ என்றார்.
தொடர்ந்து கல்வி, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் பல்வேறு மன்ற ங்களில் சிறந்து விளங்கிய 90 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் இளநிலை பட்டப்படிப்பில் சிறந்த மாணவராக டி.கார்த்திபன், முதுநிலை பட்டப்படிப்பில் சிறந்த மாணவராக எஸ்.கரண் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.