சூலூர் தொகுதி செம்மாண்டம்பா ளையம் ஊராட்சியில் 36.9. இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் பணி- கான்கிரீட் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் பணியை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு.க.அசோகன், சூலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாதப்பூர் பாலு, சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி தங்கவேல், கருமத்தம்பட்டி நகர கழக செயலாளர் ஆதவன் பிரகாஷ், கண்ணம்பாளையம் கவுன்சிலர் செல்வராஜ், சூலூர் கார்த்தி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.