fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 33வது பட்டமளிப்பு விழா

பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 33வது பட்டமளிப்பு விழா

கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறு வனம் பிஎஸ்ஜி ஐஎம்எஸ் – ஆர் அரங்கில் 33வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது. இதில் பிஎஸ்ஜி ஐஎம்எஸ் – ஆர் மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் டி. எம். சுப்பாராவ் வரவேற்புரை ஆற்றினார்.


பிஎஸ்ஜி இன்ஸ்டிட்யூஷன்ஸ் மேனேஜிங் டிரஸ்டி கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இவர் தனது தலைமை உரையில் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் பிஎஸ்ஜியின் சிறப்பான பங்களிப்பை வலியுறுத்தினார்.


முக்கிய விருந்தினராக கேரளா MES அகாடமி ஆஃப் மெடிக்கல் சயன்சஸ் டீன் டாக்டர் கிரிஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து தனது பட்டமளிப்பு உரையில், அவர் வாழ்நாள் முழுவதும் கற்றல், ஒழுக்கமான நடைமுறை மற்றும் கருணையுடன் மருத்துவ சேவை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிஎஸ்ஜி ஐஎம்எஸ் – ஆர் பொது மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் டால்ஸ்டாய் ஆர் ஹிப்போக்ரடிக் சத்தியத்தை மாண வர்களுக்கு எடுத்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் புதிய மருத்து வர்களுக்கு “சேவைக்கு அழைப்பு உரை” வழங்கினார்.

சிறந்த மாணவர் விருதை பெற்ற டாக்டர் சர்வஜித் வி. நாராயண், தனது நன்றியுரை மூலம் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நிறுவனம் மீதான தனது நன்றியை உணர்ச்சிகரமாக பகிர்ந்து கொண்டார்.
விழா பிஎஸ்ஜி ஐஎம்எஸ் – ஆர் துணை முதல்வர் (கல்வி விவகாரம்) டாக்டர் ஜி. சுமித்ரா நன்றி உரையு டன் முடிவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img