fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் 3 நாள் தீபாவளி கண்காட்சி - விற்பனை

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் 3 நாள் தீபாவளி கண்காட்சி – விற்பனை

“உள்ளூர் மக்களுக்கு குரல்” இயக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி அக்டோபர் 11 முதல் 13 வரை த்ரெட்ஸ், ட்ரெண்ட், டேஸ்ட் (3T’s)” என்ற மூன்று நாள் தீபாவளி கண்காட்சி விற்பனை நிகழ்வை வளாகத்தில் நடத்தியது.

இந்த கண்காட்சி, பாரம்பரிய கைவினை மற்றும் உள்ளூர் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாகியது.

இதில் பார்வையாளர்கள் தீபாவளியின் பண்டிகை உற்சாகத்தை அனுபவித்து, தனித்துவமான தயாரிப்புகளை நேரடி யாகப் பார்க்கவும் வாங்கவும் வாய்ப்பு பெற்றனர்.

இதில் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு சிறந்த அணிகலன்கள், நவநாகரீக மற்றும் பண்டிகை உடைகள், பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கைத்தறி புட வைகள், சோப்புகள் மற்றும் அழகு சாதன பொருட்கள், மாணவர் தொழில் முனைவோரின் தனித்துவமான கை வினைப் பொருட்கள், பிரீமியம் ஜவுளி மற்றும் துணிகள், ஃபேஷன், அலங்காரப் பொருட்கள், தனித்துவமான பரிசுப் பொருட்கள் இடம் பெற்றன.


இந்த நிகழ்வு மாணவர்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுக்கு ஒரு வணிகத் தளத்தை வழங்கி, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்க பொதுமக்களை ஊக்குவித்தது.

படிக்க வேண்டும்

spot_img