கோவையில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புத்துணர்வான அறிவு இயக்கம் தற்போது கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாற்றத்தை வழி நடத்துவது, இந்தியாவின் முதல் மனித நுண்ணறிவு ஆலோசனை நிறுவனம் “ஆறுச்சுடர்”. இதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிகா நேதாஜி மற்றும் அவரது குழு சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள முன்னணி கல்லூரிகள், கே.பி.ஆர் ஆர்ட்ஸ் & சைன்ஸ் காலேஜ், சக்தி இன்ஜினியரிங் காலேஜ், கதிர் இன்ஜினியரிங் காலேஜ், மகாலிங்கம், என்.ஜி.பி, பார்க், சி.ஐ.டி, பி.எஸ்.ஜி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து, ஆறுச்சுடர் நிறுவனம் நடத்தவிருக்கும் இந்தியாவின் முதல் “Brain GPT – Human Intelligence Workshop”குறித்து விவாதித்தனர்.
இது குறித்து நிறுவனர் ஆஷிகா நேதாஜி கூறியதாவது:
நாம் ஏற்கனவே ஏ.ஐ யை கற்றுக்கொண்டு வருகின்றோம். ஆனால் மனித மூளை எப்படி முடிவெடுக்கிறது, உணர்ச்சி மேலாண்மை எப்படி நடக்கிறது, சிந்தனை எப்படி உருவாகிறது என்பதைக் கற்றுக் கொடுப்பதே ஆறுச்சுடரின் குறிக்கோள்.
இந்த மூன்று நாள் பட்டறை அக்டோபர் 16 முதல் 18 வரை கே.பி.ஆர் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு கோயம்புத்தூரை உலகின் மூன்றாவது ‘மனித மூளை செயல்பாட்டு திட்டம்’ தொடங்கும் நகரமாக மாற்றவுள்ளது என்பது பெருமைக்குரியது.
இந்த நிகழ்ச்சியில் கல்வி, தொழில்நுட்பம், மற்றும் நிறுவனத் தலைவர்கள் என பல்வேறு துறைகளிலிருந்து முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். ஆறுச்சுடர் குழுவின் நோக்கம் ஆர்டிபிகல் இண்டெலிஜென்ஸ் வளர்ந்தாலும், ஹியுமன் இண்டெலிஜென்ஸ் தான் வழிநடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.