ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.32 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.32 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சர்க்கார் பெரியபாளையம், மொரட்டுப்பாளையம், புத்தூர்பள்ளபாளையம், நடுப்பட்டி, செங்காளிபாளையம், சின்னேகவுண் டன்வலசு மற்றும் வட்டாலபதி ஊராட்சி
பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் திருப்பூர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இந்த திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய் யும் வகையில் ஆய்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சியில் ரூ.29.40 லட்சத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் ரூ.22 லட்சத்தில் மதிப்பீட்டில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கீழ் திம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் கட்டப்படும் இரண்டு வகுப்பறை கட்டடம், புத்தூர் பள்ளபாளையம் ஊராட்சியில் செல்லிபா ளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.28 லட்சம் மதிப் பீட்டில் வகுப்பறை கட்டடம், நடுப்பட்டி ஊராட்சியில் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்லேக வுண்டன்பாளையத்தில் கிராம செயலகம் ஆகிய திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதேபோல், செங் காளிபாளையம், சின்னே கவுண்டன்வலசு, வட்டா லபதி உள்ளிட்ட ஊராட்சி களையும் சேர்த்து மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

மேலும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மீனாட்சி, உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், செந்தில், ரமேஷ், ஊத்துக்குளி வட்டாட்சியர் சரவணன் உள்பட பலர் உடனிருந் தனர்.