நேற்றைய பொதுக்குழுவில் அ.தி.மு.க வின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஒற்றைத் தலைமை சர்ச்சைக்கு மத்தியில் தமிழ்மகன் உசேன் பொறுப்பேற்றுக் கொண்டது, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தது. “கூட்டம் நடத்தலாம். 23 தீர்மானங்களை மட்டும் ஆலோசித்து முடிவெ டுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித் தாலும் எந்த முடிவும் எடுக்க கூடாது” என்று தெரி விக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அத்தனை தீர்மானங்களையும் புறக்கணிப்பதாகவும் மற்றொரு நாள் ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு சேர்த்து இந்த தீர்மானங்க ளும் நிறைவேற்றப்படும் என்று சி.வி.சண்முகமும், கே.பி.முனுசாமியும் அறிவித்தனர்.
23 தீர்மானங்களை தவிர வேறெந்த முடிவும் எடுக்க கூடாது என நீதிமன்றம் அறிவித்த நிலையில் அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நடவடிக்கையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட பின்னர் தற்போது வரை பொதுக்குழுவுக்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் இணைந்தே வெளியிட்டு வந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பொதுக்குழு அறிவிப்பை அவைத் தலைவர் வெளியிட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
அவைத் தலைவர் பதவி என்பது கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது மட்டும்தான். அதி.மு.கவின் உள்கட்சி விதி என்பது தேர்தல் ஆணையத்தின் இணைய தளப் பக்கங்களில் இருப்பதுதான். அ.தி.மு.கவின் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் இருக்கிறது. அந்த விதியை பொதுக்குழுவில் திருத்தவில்லை.
பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கி ணைப்பாளர் ஆகியோரிடம் உள்ளது. அப்படித்தான் இந்தப் பொதுக்குழுவையும் இருவரும் கூட்டினார்கள். அது விதியில் மிகத் தெளிவாகவும் உள்ளது. அப்படிப் பார்த்தால் அவைத் தலைவர் கூட்டுகின்ற பொதுக்குழு மட்டும் எப்படி செல்லுபடியாகும்?
இந்த பரபரப்பான சூழலில், ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்ற கேள்வி அ.தி.மு.க வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதிமுக இரண்டாக உடைந்து விட்டது. இனி வரும் நாட்களில் சட்டப் போராட்டம் தொடரலாம்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்!