fbpx
Homeபிற செய்திகள்2500 குடும்பங்களுக்கு கல்லறை தோட்டத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

2500 குடும்பங்களுக்கு கல்லறை தோட்டத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் சிறுபான்மை மக்களான கிறிஸ்து வர்கள் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாதிரியார் வின்சென்ட் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், தங்கள் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் அதி கமாக இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு ஏற்ப கல்லறை தோட்டம் வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.

தற்போது கல்லறை தோட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே கோவைப்புதூர் பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் பயன்பாட்டிற்காக கல்லறை தோட்டத்திற்கு என இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img