Home தமிழ்நாடு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை...

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005

சிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது.

தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மொத்தம் 56,853 பயனாளிகள் முதன்முறையாக சேவைகளை பெற்றும், இதுதவிர 1,35,005 பயனாளிகள் தொடர் சேவைகளை பெற்றும் பயன் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில், உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, அதன்மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும்விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று, சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, உயிர் காக்கும் மருத்துவச் சேவையை பொதுமக்களுக்கு வழங்கிடும் பொருட்டு, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 அன்று தொடங்கி வைத்தார் முதல்வர். அத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

45 வயதுக்கு மேற்பட்டோர்
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம்/நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் மூலம் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளை வழங்குவதுடன், தொடர்ந்து அவர்களை கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து, தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இத்திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் பணியமர்த்தப்பட்ட 143 இடைநிலை சுகாகார சேவையாளர்கள் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து தொற்றா நோய்கள்
அனைத்து தொற்றா நோய்க்கான சேவைகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் முதற்கட்டமாக, கீழப்பூங்குடி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இச்சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டு, தற்போது வரை வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட், நோய் தடுப்பு பணியாளர் செவிலியர், இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது வரை
அதன் அடிப்படையில், உயர் இரத்த அழுத்தம் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றவர்களில் முதன்முறையாக சேவைகளைப் பெற்ற 24,772 பயனாளிகள் மற்றும் தொடர் சேவைகள் 61,930 பயனாளிகளும், நீரழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றவர்களில் முதன்முறையாக சேவைகளைப் பெற்ற 16,576 பயனாளிகள் மற்றும் தொடர் சேவைகள் 41,440 பயனாளிகளும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றவர்களில் முதன்முறையாக சேவைகளைப் பெற்ற 7,522 பயனாளிகள் மற்றும் தொடர் சேவைகள் 18,805 பயனாளிகளும், நோய் ஆதரவு சிகிச்சை சேவைகள் பெற்றவர்களில் முதன்முறையாக சேவைகளைப் பெற்ற 4,128 பயனாளிகள் மற்றும் தொடர் சேவைகள் 6,752 பயனாளிகளும், இயன்முறை சிகிச்சை பெற்றவர்களில் முதன்முறையாக சேவைகளைப் பெற்ற 3,852 பயனாளிகள் மற்றும் தொடர் சேவைகள் 6,075 பயனாளிகளும், சிறுநீரக நோய்க்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளை பெற்றவர்களில் முதன்முறையாக சேவைகளைப் பெற்ற 3 பயனாளிகள் மற்றும் தொடர் சேவைகள் 3 பயனாளிகளும் என இத்திட்டம் துவங்கப்பட்டு, 13.04.2022 வரை மொத்தம் 56,853 பயனாளிகள் முதன்முறையாக சேவைகளை பெற்றும், இதுதவிர 1,35,005 பயனாளிகள் தொடர் சேவைகளை பெற்றும் பயன் பெற்றுள்ளனர். ‘ஓயா

உழைப்பின் ஓராண்டு’
முதல்வர் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு’ என்ற அடிப்படையில், ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

குறிப்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48 திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், உயிர் காக்கும் மருத்துவச் சேவையை பொதுமக்களுக்கு வழங்கி, பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.

‘வயதான காலத்திலும் நல்ல உடல் ஆரோக்கியம்’
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்ற தஞ்சாக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆலடி நத்தம் கிராமத்தைச் சார்ந்த பாப்பு தெரிவித்ததாவது:
எனக்கு வயது 60-க்கு மேல் ஆகிவிட்டது. சுகர் மற்றும் பிரஷ்ஷரால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, எங்களது கிராமத்தில் இருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தேன்.

இந்நிலையில், முதல்வர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தினை செயல்படுத்தியதன் மூலம், அவ்வப்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் எனது வீட்டிற்கு நேரடியாக வந்து உடல் நலத்தினை பரிசோதனை செய்து, எனக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

ஆதலால், தற்போது வயதான காலத்திலும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறேன். எங்களைப் போன்ற வயதானவர்களின் உடல் நிலையை பேணிக்காத்து, எங்களது குடும்பத்தில் ஒருவராக திகழ்ந்து, இதுபோன்ற மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிற முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

‘வருகிறது மருந்து, மாத்திரை குறைகிறது குடும்பத்தின் சிரமம்’
இத்திட்டத்தின் கீழ் இயன்முறை மருத்துவ சிகிச்சையின் மூலம் பயன்பெற்று வரும், இளையான்குடி வட்டாரம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அழகர்சாமி தெரிவித்ததாவது:

எனக்கு வயது 70. வயது முதிர்வின் காரணமாக சில மாதங்களுக்கு முன் ஒரு கை மற்றும் கால் (பக்கவாதம்) செயலிழந்தது மட்டுமல்லாமல், சுகர் மற்றும் பிரஷ்ஷரால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி மருத்துவம் பார்த்து வந்தேன்.

போதிய வருமானம் இல்லாத காரணத்தினால், சில நேரங்களில் மருத்துவம் பார்க்க பணமில்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தேன். இந்நிலையில், முதல்வர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தினை செயல்படுத்தியதன் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் எனது வீட்டிற்கே வந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, இயன்முறை மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.

தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி வருவதால், தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறேன். எனது குடும்பத்தினரின் சிரமங்களும் இதன்மூலம் குறைக்கப்பட்டுள்ளன.

எங்களைப் போன்ற வயதானவர்கள், ஏழை, எளிய மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு, எங்களின் சிரமங்களை களைவதற்கு இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உயிர் காக்கின்ற மருத்துவ சேவையை வழங்கி வருகிற முதல்வருக்கு நாங்கள் வாழ்நாள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றார்.

தொகுப்பு:
அ.கொ.நாகராஜபூபதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மு.ராஜசெல்வன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
சிவகங்கை மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

நெக்ஸ்ட்-ஜென் மொபில் சூப்பர் லூப்ரிகண்ட் அறிமுகம்

திருச்சி - எக்சான் மொபில் லூப்ரிகண்டுகள் பிரைவேட் லிமிடெட், அதன் நெக்ஸ்ட்-ஜென் பாசஞ்சர் வெஹிக்கில் லூப்ரி கண்டுகளான “மொபில் சூப்பர்”ஐ புதிய, மேம்படுத்தப்பட்ட பேக்கேஜிங்கில் புதுப்பித்த லேபிள்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை,மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் ராமநாதபுரம் அரசு விருந்தினர் இல்லத்தில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

மாற்றுத்திறனாளர்கள் சேவை மையம் திறப்பு

சேவை மையம் மாற் றுத்திறனாளர்கள் சேவை மையம் திறப்பு விழா கோவை அரசு கல்லூரி சாலையில் உள்ள சேரன் டவர்ஸ் கட்டிட வளாகத் தில் நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய மகளிர்...

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா: பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா...

மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்: பல்கலைக்கழக பதிவாளர் பேச்சு

பொறியியல் பட்டம் பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை நம்பி காத்திருக்காமல் தொழில் முனைவோர்களாக மாற முயல வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். ஜி. ரவிக்குமார் கேட்டுக்கொண்டார்.