Home தமிழ்நாடு முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து

முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் மேம்பாட்டிற்கான படைப்புக்களை உருவாக்கிடும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் அவர்களது படைப்புக்களை நூலாக வெளியிடும் வகையில், ரூ.50,000 நிதியுதவி தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட எழுத்தா ளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், தமிழக அரசால் 2021-2022-ஆம் ஆண்டிற்கு சிறப்பு படைப்புக்களை தெரிவு செய்திட அமைக்கப்பட்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 படைப்புக்களை நூலாக வெளியிடு வதற்கு ஒவ்வொரு படைப்பிற்கும் செலவினத் தொகையாக ரூ.50,000 அல்லது செலவினத் தொகை இவற்றில் எது குறைவான தொகையோ அதை நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதமைச்சரால், 13.05.2022 அன்று தலைமைச் செயல கத்தில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

சிவ கங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரை ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் காப்பாளர் த.செந்தில்குமாருக்கு ரூ.25,000 நிதியுதவி வழங்கி ஊக்கப்ப டுத்தியுள்ளார்கள்.

அவருக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் உட்பட விடுதிக்காப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

நெக்ஸ்ட்-ஜென் மொபில் சூப்பர் லூப்ரிகண்ட் அறிமுகம்

திருச்சி - எக்சான் மொபில் லூப்ரிகண்டுகள் பிரைவேட் லிமிடெட், அதன் நெக்ஸ்ட்-ஜென் பாசஞ்சர் வெஹிக்கில் லூப்ரி கண்டுகளான “மொபில் சூப்பர்”ஐ புதிய, மேம்படுத்தப்பட்ட பேக்கேஜிங்கில் புதுப்பித்த லேபிள்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை,மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் ராமநாதபுரம் அரசு விருந்தினர் இல்லத்தில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

மாற்றுத்திறனாளர்கள் சேவை மையம் திறப்பு

சேவை மையம் மாற் றுத்திறனாளர்கள் சேவை மையம் திறப்பு விழா கோவை அரசு கல்லூரி சாலையில் உள்ள சேரன் டவர்ஸ் கட்டிட வளாகத் தில் நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய மகளிர்...

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா: பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா...

மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்: பல்கலைக்கழக பதிவாளர் பேச்சு

பொறியியல் பட்டம் பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை நம்பி காத்திருக்காமல் தொழில் முனைவோர்களாக மாற முயல வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். ஜி. ரவிக்குமார் கேட்டுக்கொண்டார்.