கோவை பேரூர், பேரூராட்சி 7 வது வார்டு பகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் ராதா கிருஷ்ணன் தாம் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் நீண்ட காலமாக உள்ள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், பேரூர், பேருராட்சியில் 7 வது வார்டில் தி.மு.க. சார்பாக உதயசூரி யன் சின்னத்தில் போட்டியிடு கிறார் ராதாகிருஷ்ணன். இவர் அந்த பகுதி மக்களிடையே விநோத முறையில், வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழக பாரம் பரிய முறைப்படி, சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்று, தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இதனிடையே செய்தி யாளர்களிடம் பேசிய அவர், கடந்த எட்டு மாத கால தி.மு.க ஆட் சியில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தாம் வெற்றி பெற்றால் இந்த வார்டு பகுதியில் நீண்ட காலமாக உள்ள சாக் கடை பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என உறுதிய ளித்தார்.