கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி செட் டிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வருகிறது. ‘’ஏய்! யப்பா! யாருப்பா! அங்க… அடேய் மாடு வருது வருது பாருடா… என ஜல்லிக்கட்டுக்கே உரிய கமெண்ட்ரியோடு காலை ஏழு மணிக்கு ஆரவாரத்துடன் தொடங்கியது.
கோவை ஜல்லிக்கட்டு. இந்த போட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பச்சை கொடி காட்டி தொடங்கி வைத்தார். முதல் காளையாக சர வணம்பட்டி பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
மாடுகளுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டின் 5 சுற்றுகள் முடிவடைந்துள் ளன. மொத்தமாக 500 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன. நான்காம் சுற்றில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற வீரர் கலந்து கொண்டு விளையாடினார்.
இவர் ஒரே சுற்றில் 12 காளைகளை அடக்கி 12 தங்க காசுகள், அண்டா, எல்.இ.டி., டி.வி, கைக்கடிகாரம் ஆகிய பரிசுகளை வென்றுள்ளார். மேலும், சுற்றின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட பிரபாகர னுக்கு சிறப்பு பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி சைக்கிள் ஒன்றை வழங்கினார்.
பிரபாகரன் இந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்றவர்.
இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், “நான் தொடர்ந்து 3 முறை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்துள்ளேன். இதுவரை வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற 12க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்றுள் ளேன்.” என்றார்.
மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும், அங்கு வரக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். அதன் படி சான்றிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக நேற்று மாலை முதலே வெளியூர்களில் இருந்து காளைகள் வர துவங்கியது. தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
ஜல்லிக்கட்டு போட்டி தொலைகாட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.ஜல்லிக் கட்டு நடைபெறும் பகுதியில், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எருது விடும் விழாவில் மாடு
முட்டி 13 வயது சிறுமி பலி
வேலூர் மாவட்டம் பணமடங்கி கிராமத்தில் கடந்த 15ம் தேதி எருது விடும் திருவிழா நடந்தது. அப்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வினோதினி மீது மாடு முட்டியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பயன் இல்லாமல் வினோதினி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.