fbpx
Homeபிற செய்திகள்2021ம் ஆண்டின் சூப்பர் ஹீரோக்கள்: 16 பேருக்கு ‘அலர்ட் பியிங்’ விருது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

2021ம் ஆண்டின் சூப்பர் ஹீரோக்கள்: 16 பேருக்கு ‘அலர்ட் பியிங்’ விருது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சிறந்த சேவையை பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது

கொரோனா தொற்று பரவல் காலத்தில் பலரது உயிரைக் காப்பாற்றியவர்களையும், சமூகத்திற்கு தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கிய நல்ல மனிதர்களை போற்றி கவுர விக்கும் விதமாக கடந்த 2021ம் ஆண்டிற்கான அலர்ட் பியிங் விருது 16 பேருக்கு வழங்கப்பட்டது.

அலர்ட் அமைப்பு ஆண்டுதோறும் இந்த ‘அலர்ட் பியிங்’ விருதை நிஜ வாழ்க்கையின் சூப்பர் ஹீரோக் களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இதன் 5-வது விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

நிஜ வாழ்க்கையில் பல் வேறு நிலைகளில் சிறப்பாக செயல்பட்ட தனிநபர்களுக்கும் கடமையை தாண்டி மனித நேயத்துடன் பணியாற்றிவர்க ளுக்கும் நிறுவனங்களுக்கும் என இந்த விருது 15 பேருக்கு வழங் கப்படுகிறது.

நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட இந்த 15 பேருக்கும் தமிழக சுகா £ரத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது மிகச் சிறப்பாக பணியாற்றிய தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையை போற்றி கவுரவிக்கும் விதமாக அலர்ட் பியிங் சிறப்பு விருது அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

இத்துடன் சேர்த்து மொத்தம் 16 விருதுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்க ப்பட்டன.
தனி நபர் பிரிவில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றிய 7 நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கடமையையும் தாண்டி சிறப்பாக பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த காவலர் ராஜேஸ்வரி மற் றும் மன்னார்குடியைச் சேர்ந்த வனஜா ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

ஸ்ட்ரீட் விஷன் சமூக அறக்கட்டளை, ஐஸ் வர்யம் அறக்கட்டளை மற்றும் சோல்ப்ரீ ஆகிய அமைப்புகளும் இந்த விருதுகளைப் பெற்றன.

சிறப்பு பிரிவில், காரிட்டாஸ் இந்தியா மற்றும் போர்டு பிசினஸ் சொலூஷன்ஸ், இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்த விருது இன்போசிஸ் அறக்கட்டளைக்கும் வழங்கப் பட்டது. இந்த சூப்பர் ஹீரோக்களை நேச்சுரல் குரூப் ஆப் சலூன்ஸ் நிறுவனர் வீணா குமாரவேல், சிபிசி ஐடி தலைமை இயக்குனர் ஷகீல் அக்தர், ஆற்காடு இளவரசரின் வாரிசு நவாப்சாதா முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனை தலைவரும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார் மற்றும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர்.

இதன் ஆலோசகர்களாக ரேடியன்ட் மெடிக்கல் சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரேணுகா டேவிட் மற்றும் நேச்சுரல் குரூப் ஆப் சலூன்ஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சி.கே. குமாரவேல் ஆகியோர் இருந்தனர்.

இந்த விருதுகள் குறித்து அலர்ட் அமைப்பின் தலை வர் முரளிதரன், கூறு கையில், விபத்தில் சிக்கிய ஆதரவற்றோருக்கு அவசரகால ‘உயிர் காக்கும்’ உதவியை இலவ சமாகவும், கால தாமதமின்றி வழங்கவும், ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தை அறிமுகப்படுத்திய, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நேரத்தில் எங்கள் அமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.

விருது பெற்றவர்கள் பற்றி இந்த அமைப்பின் நிறுவ ன அறங்காவலர் கலா பாலசுந்தரம், அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் நிர் வாக அறங்காவலர் ராஜேஷ் ஆர் திரிவேதி உள்ளிட்டோர் பேசினார்கள்.

விருது பெற்றவர்களின் பட்டியல்: 1. முத்துகிருஷ்ணன் – தனிநபர், 2. டேனியல் ஜேக்கப் -தனிநபர், 3. எம் ஸ்ரீகுமார்- தனிநபர், 4. ஜோரைடா சாமுவேல் – தனிநபர், 5. கார்த்திகேயன் கணேசன் – தனிநபர், 6. ராதிகா சாஸ்திரி – தனிநபர், 7. ரோஹித் குமார் – தனிநபர், 8. ராஜேஸ்வரி – கடமைக்கு அப்பாற் பட்டது, 9. வி. வனஜா – கடமைக்கு அப்பாற்பட்டது, 10. ஸ்ட்ரீட் விஷன் சமூக அறக்கட்டளை – நிறுவனம், 11. சோல்ப்ரீ – நிறுவனம், 12. ஐஸ்வர்யம் அறக்கட்டளை – நிறுவனம், 13. காரிட்டாஸ் இந்தியா – சிறப்பு விருது, 14. போர்டு பிசினஸ் சொலூஷன்ஸ் – சிறப்பு விருது, 15. இன்போசிஸ் அறக்கட்டளை – ஐகான் விருது – நிறுவனம், 16. தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை – ஐகான் விருது.

படிக்க வேண்டும்

spot_img