கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அதிமுக ஒன்றிய, நகர கழக சார்பில் மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் நிறுவனருமான எம்ஜிஆரின் 105-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி குழு தலைவருமான பையூர் பெ.ரவி, நகர செயலாளர் வாசுதேவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட கழக செயலாளர், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்ப ட்டது.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் பி.டி சுந்தரேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகரமன்ற தலைவர் தங்கமுத்து, மாவட்ட வழக்கறிஞர் அணி ஜெயகுமார், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா கேசவன், கவுன்சிலர் விக்ரம்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் பையூர் மோகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.