Home தமிழ்நாடு 700 காளைகள் - 300 வீரர்களுடன் கோவையில் 21-ம் தேதி ஜல்லிக்கட்டு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு

700 காளைகள் – 300 வீரர்களுடன் கோவையில் 21-ம் தேதி ஜல்லிக்கட்டு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு

கோவையில் வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. கொரோனா பரவல் 2 ஆயிரத்தை கடந்து செல்வதால் மாவட்ட நிர்வாகம் பார்வையாளர்களுக்கு அனுமதி தரவில்லை. தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத னையடுத்து கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் செட்டிப்பாளையம் எல்.அன்.டி. பைபாஸ் ரோட்டில் போட்டிகளை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது.
இது குறித்து ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மருதமலை சேனாதிபதி கூறியதாவது:-

இதுவரை போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 1000 காளைகள் வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் 600 காளைகள் முதல் 700 காளைகள் வரை களம் இறக்கப்பட உள்ளது. இதில் தென் மாவட்டங்களான தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் வருகின்றன. கொங்கு மண்டலத்தில் இருந்து 200 காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 மாடுபிடி வீரர்கள் 300 பேர் கலந்து கொள்கிறார்கள். காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயமாக செலுத்தியதற்கான சான்றிதழை வைத்து இருக்க வேண்டும். வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் 150 பேர் வரை கலந்து கொண்டு போட்டிகளை ரசிக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் 2 ஆயிரத்தை கடந்து செல்வதால் மாவட்ட நிர்வாகம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

நெக்ஸ்ட்-ஜென் மொபில் சூப்பர் லூப்ரிகண்ட் அறிமுகம்

திருச்சி - எக்சான் மொபில் லூப்ரிகண்டுகள் பிரைவேட் லிமிடெட், அதன் நெக்ஸ்ட்-ஜென் பாசஞ்சர் வெஹிக்கில் லூப்ரி கண்டுகளான “மொபில் சூப்பர்”ஐ புதிய, மேம்படுத்தப்பட்ட பேக்கேஜிங்கில் புதுப்பித்த லேபிள்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை,மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் ராமநாதபுரம் அரசு விருந்தினர் இல்லத்தில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

மாற்றுத்திறனாளர்கள் சேவை மையம் திறப்பு

சேவை மையம் மாற் றுத்திறனாளர்கள் சேவை மையம் திறப்பு விழா கோவை அரசு கல்லூரி சாலையில் உள்ள சேரன் டவர்ஸ் கட்டிட வளாகத் தில் நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய மகளிர்...

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா: பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா...

மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்: பல்கலைக்கழக பதிவாளர் பேச்சு

பொறியியல் பட்டம் பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை நம்பி காத்திருக்காமல் தொழில் முனைவோர்களாக மாற முயல வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். ஜி. ரவிக்குமார் கேட்டுக்கொண்டார்.