fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தினமும் 2 கி.மீ. ஓட்டம் 10 நிமிட தியானம்

கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தினமும் 2 கி.மீ. ஓட்டம் 10 நிமிட தியானம்

கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவ லர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில், ‘தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொ ழுது அது அவர்க ளுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும்‘ என்று கோவை மாநகர காவல் ஆணையர் வி.பால கிருஷ்ணன் வழங்கிய அறிவுரைகளின் படி, 48 நாட்களுக்கான 2 கி.மீ. ஓட்டம் மற்றும் 10 நிமிட தியானம் செய்யும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) துவங்கப்பட்டது.

இதில் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 40 ஆண் காவல்களும், 20 பெண் காவலர்களும் ஆக மொத்தமாக 60 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு, 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னர் 10 நிமிடங்கள் தியானம் செய்தார்கள்.

இந்தப் பயிற்சியானது இன்று முதல் தொடர்ச் சியாக 48 நாட்கள் நடைபெறவுள்ளது.

மேற்படி 2 கி.மீ ஓட்டமானது கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி, டாக்டர் பால சுந்தரம் ரோடு, பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் கி.சேகர், வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் கி.ஜெயவேல், காவல் ஆய்வாளர் ரி.கிட்டு மற்றும் இருபால் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img