Home தமிழ்நாடு மழை, வெள்ளப்பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்: முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்

மழை, வெள்ளப்பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்: முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மக்க ளுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த 25ம் தேதி வரலாறு காணாத அளவில் அதிகனமழை கொட்டியது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகளிலும், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.

திருச்செந்தூரில் தேங்கிய தண்ணீர் ஒரே நாளில் வடிய வைக்கப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பியது. இதேபோல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும் தண் ணீர் வடிந்தநிலையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களிலும், புறநகரில் சில பகுதிகளிலும் இன்னும் மழைநீர் தண்ணீர் தேங்கி உள்ளது.

தூத்துக்குடி முத் தம்மாள் காலனி, ராம்நகர், ரகுமத் நகர், ஆதிபராசக்தி நகர், வீட்டு வசதி குடியிருப்பு, அம்பேத்கார் நகர், பிரையண்ட் நகர், சிதம்பர நகர் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம், ஒருங்கிணை நீதிமன்ற வளாகம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் வடியாமல் உள்ளது.

மாநகர பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த வளாகத்தில் தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகம் போன்ற முக்கிய கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் அங்கு வரும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இதேபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், தூத் துக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கனமழையால் பாதிக் கப் பட்டுள்ள தூத் துக்குடியில் வெள்ள சேதங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார்.
அங்கிருந்து கார் மூலமாக வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவையில் 700 காளைகள், 300 வீரர்களுடன் களைகட்டிய ஜல்லிக்கட்டு: ஒரே சுற்றில் 12 காளைகளை அடக்கிய பிரபாகரன்

கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி செட் டிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வருகிறது. ‘’ஏய்! யப்பா! யாருப்பா! அங்க… அடேய் மாடு...

ஈரோட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட பூங்காநகர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உட்பட...

நாமக்கலில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி புதூர் பகுதியில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட, திக்கணங்கோடு பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி...

முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி – கலெக்டர் நேரில் ஆய்வு

சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி...