Home தமிழ்நாடு கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனத்தின் தனிக்கடன் வசூல் 92.5 சதவீதம் உயர்வு

கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனத்தின் தனிக்கடன் வசூல் 92.5 சதவீதம் உயர்வு

கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனம் பெங்களூரை தலைமையிட மாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி சேவை மற்றும் சிறுநிதி சேவை நிறுவனம் இது.

இந்நிறுவனம் இதன் கடந்த மாத வர்த்தக செயல்பாடுகளை ஸ்டாக் எக்சேஞ்சில் பதிவேற்றம் செய்துள்ளது.

அதில் கோவிட்டுக்கு முந்தைய நிலையில் கடன் வழங்குதல் மற்றும் கடன் வசூல் ஆகியவை கோவிட்டுக்கு பிந்தைய நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிலுவைத் தொகையை தவிர்த்து இந்நிறுவனத்தின் தனி யான கடன் வசூலானது, கடந்த மாதத்தில் 92.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியான நிலுவைத் தொகை வசூலானது கடந்த மாதம் 99 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுநிலுவைத் தொகை வசூலில் நிலையான முன்னேற்றத்தைக் குறிக்கி றது. முதலீடு வரம்பு ஆபத்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் குறைந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக, ஒருங்கிணைந்த நிதிநிலை அடிப்படையில், கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனத்தின் மொ த்த கடன் இலாகாவானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியில் 16.7 சதவீதம் வளர்ச்சி கண்டு 13,259 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை 1424 கிளைகளைக் கொண்டிருந்த இந்நிறுவனத்தின் கிளைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1527ஆக உயர்ந்துள்ளது.

சிறப்பான வளர்ச்சி குறித்து கிரெடிட் அக்சஸ் கிராமீன் நிறுவனத் தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான உதய்குமார் ஹெப்பர் கூறியதாவது:

எங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கியதோடு, புதிய வாடிக் கையாளர்களைச் சேர்ப்பதிலும் அதிக கவனம்செலுத்தினோம்.
எங்கள் மாதாந்திர கடன் வழங்கல் களையும் படிப்படியாக அதிகரித்தோம்.
இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் நிலுவைத் தொகையை குறைக்க உதவும் மாதாந்திர சேகரிப்பு செயல்திறனை மேலும் அதிகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நாடு முழுவதும் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளது. இதுபொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எனவே நிதிஆண்டு 2022-ல் நேர்மறையான முன்னேற்றம் இருக்கும் என்று நம்பு கிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவையில் 700 காளைகள், 300 வீரர்களுடன் களைகட்டிய ஜல்லிக்கட்டு: ஒரே சுற்றில் 12 காளைகளை அடக்கிய பிரபாகரன்

கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி செட் டிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வருகிறது. ‘’ஏய்! யப்பா! யாருப்பா! அங்க… அடேய் மாடு...

ஈரோட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட பூங்காநகர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உட்பட...

நாமக்கலில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி புதூர் பகுதியில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட, திக்கணங்கோடு பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி...

முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி – கலெக்டர் நேரில் ஆய்வு

சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி...