fbpx
Homeபிற செய்திகள்1500 விவசாயிகளிடம் ரூ.22 கோடியில் 2078 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்- கோவை மாவட்ட ஆட்சியர்...

1500 விவசாயிகளிடம் ரூ.22 கோடியில் 2078 மெ.டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்- கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

கோவை மாவட்டத்தில் உள்ள 7 கொப்பரை தேங்காய் கொள் முதல் நிலையங்கள் மூலம் 1500 விவசாயிகளிடமிருந்து ரூ.22 கோடி மதிப்பில் 2078 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், கிணத் துக்கடவு அருகே சிங்கரம் பாளையம் பிரிவு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை யில், செய்தியாளர் பயணம் மேற் கொண்டு, பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட் சியர் செய்தியாளர்களிடம் தெரிவித் ததாவது:
தமிழக அரசு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயைப் பெருக் கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங் குமுறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் பொள் ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கொப்பரை கொள் முதல் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.

தற்போது, கொப்பரை கொள் முதலை அதிகரிக்க 2.6.2022 முதல் தொண்டாமுத்தூர், அன்னூர் ஆகிய இடங்களில் 2 நிறுவனங்களை புதியதாக கூடுதல் கொள்முதல் நிலை யங்களாக அறிவித்து, செயல்பட்டு வருகின்றன.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நல னுக்காக நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும் பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இந்த கொள் முதலுக்கு பிப்ரவரி முதல் ஜூலை 2022 வரை கால அளவு நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கொப்பரை கொள்முதல் நிலையமான செஞ்சேரியில் 604 விவசாயிகளிடமிருந்து ரூ.8.54 கோடி மதிப்பில் 807.05 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களும், நெகமத்தில் 300 விவசாயிகளிடமிருந்து ரூ.4.62 கோடி மதிப்பில் 436.95 மெட்ரிக் டன் கொப்பரை தேங் காய்களும், பொள்ளாச்சியில் 313 விவசாயிகளிடமிருந்து ரூ.4.81 கோடி மதிப்பில் 454.75 மெட் ரிக் டன் கொப்பரை தேங் காய் களும், ஆனைமலையில் 76 விவசாயிகளிடமிருந்து ரூ.1.37 கோடி மதிப்பில் 130.25 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் களும், கிணத்துக்கடவில் 106 விவசாயிகளிடமிருந்து ரூ.1.52 கோடி மதிப்பில் 144.15 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களும், தொண்டாமுத்தூரில் 12 விவ சாயிகளிடமிருந்து ரூ.14.29 இலட்சம் மதிப்பில் 13.5 மெட் ரிக் டன் கொப்பரை தேங் காய்களும், அன்னூரில் 89 விவசாயிகளிடமிருந்து ரூ.97.69 இலட்சம் மதிப்பில் 92.25 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களும் என மொத்தம் இதுவரை 1500 விவசாயிகளிடமிருந்து ரூ.22 கோடி மதிப்பில் 2078 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் அருகிலுள்ள மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் கொள் முதல் செய்யபப்படும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த தென்னை விவசாயிகள் கொப்பரை கொள்முதல் மையத் தில் தேங்காய் கொப்பரை விற் பனை செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். பயணத்தின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, வேளாண்மை அலுவலர் சூர்யா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன், விற்பனைக்கூட கண்கா ணிப்பாளர் விஜயகுமார் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img