fbpx
Homeபிற செய்திகள்தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 14 ஆவது ஆண்டு விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 14 ஆவது ஆண்டு விழா

தேனி அருகே வடபுதுப்பட்டியில் நாடார் சரஸ்வதி கல்வி குழுமங்களின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைந்து உள்ளது. இந்த கல்லூரியில் 14 ஆம் வருட ஆண்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சின்னத்திரை தொகுப்பாளரும் திரைப்பட நடிகையுமான அனிதா சம்பத் பங்கேற்று தொழிற் நுட்ப துறையில் உள்ள வேலைவாய்ப்பு பற்றியும், மாணவர்களின் கல்வி முன்னேற்றங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

நாடார் சரஸ்வதி கல்வி குழுமங்களின் தலைவர் ராஜ்மோகன், செயலாளர் ஆனந்த வேல், பொருளாளர் பழனியப்பன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் மதளை சுந்தரம், ஆகியோர் பங்கேற்று நாடார் சரஸ்வதி கல்வி குழுமங்கள் சார்பில் சாதனைகள் குறித்துசிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் மத்திய அரசு சார்பில் அகில இந்திய அளவில் நடைபெற்ற கேக்கத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியதினை குறித்தும், பாரத பிரதமர் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றியது குறித்தும் விளக்கினார். கூடிய விரைவில் தன்னாட்சி அங்கீகாரத்தை நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி பெற வாய்ப்பு உள்ளது என்றும் மாணவர்கள் மத்தியில் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், நாடார் சரஸ்வதி கல்வி குழுமங்களின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img