Home பிற செய்திகள் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் அரசுடன் கைகோர்க்கும் வோடஃபோன்

கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் அரசுடன் கைகோர்க்கும் வோடஃபோன்

வி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டு பிரிவான வோடஃபோன் ஐடியா பவுண்டேஷன், அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சிஎஸ்சி எனப்படும் பொது சேவை மையங்களுடன் இணைந்து, உயிர் கொல்லி வைரஸான கோவிட்-19-க்கு எதிராக லட்சக்கணக்கான மக்களை கோவின் போர்ட்டல் இணையதளத்தில் பதியச் செய்வதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது.

இத்திட்டம் குறித்து சிஎஸ்சி, எஸ்பிவியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் தினேஷ் தியாகி கூறியதாவது: அனைவருக்கும் சுகாதாரம் என்ற எங்களது பொறுப்புணர்வு மிக்க செயல்பாட்டில் பங்கேற்றுள்ள சிஎஸ்சி, கோவின் செயலியில் பொது மக்களை பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையும் அதுபோன்ற ஒரு செயல்பாடாகும்.

வோடஃபோன் ஐடியா பவுண்டேஷனுடன் நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த பிணைப்பானது, நாடு முழுவதும் உள்ள சமூகத்தில் மிகவும் பின்தங்கிய, விளிம்பு நிலை மக்களை சென்றடைந்து அவர்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது.

கோவிட்-19 வைரஸ் ஒழிப்புக்கான அரசின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் அனைவரையும் கோவின் ஆப் செயலியில் பங்கேற்கச் செய்வதையும் குறிக்கோளாக கொண்டது என்றார்.

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ஒழுங்கு முறை தலைவர் மற்றும் நிறுவன விவகார அதிகாரி பி. பாலாஜி பேசுகையில், சி.எஸ்.சி உடனான எங்களின் இந்த முயற்சி, கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய 10 லட்சம் மக்களை சென்றடையும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

பின் தங்கிய கிராமப்புற குடிமக்கள், எளிதில் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள மக்கள், குடிசை வாழ்மக்கள் ஆகியோருக்கு சீராக்கப்பட்ட டிஜிட்டல் பதிவு முறையின் முதுகெலும்பாக திகழும் கோவின் ஆப் பதிவு சேவையை வழங்கி ஒற்றை சேவை தீர்வை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தின் வீரிய செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதே நோக்கமாகும், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்பு

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நஞ்சுண்டாபுரம் பகுதி தி.மு.க. பிரதிநிதிகள் சண்முகம் தலைமையில் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரமத்தில் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி விழா கடந்த 13 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார்: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா...

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...