Home தமிழ்நாடு சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு எவ்வாறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்? விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு எவ்வாறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்? விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

கோவை எலும்பியல் சங்கம் வரும் 4-ம் தேதி, எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு, சாலை விபத்து நடந்த உடன், எவ்வாறு முதலுதவி அளித்து மருத்து வமனைக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

ஓவ்வொரு வருடமும் எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மக்களுக்கு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை இந்தியா முழுவதும் எலும்பியல் சங்கம் நடத்தி வருகிறது.

தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 4-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு எலும்பியல் சங்க நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சி ரெக்ஸ், கோவை எலும்பியல் சங் கத் தலைவர் மற்றும் செயலர் டாக்டர் ஜி பாலசுப்பிரமணியம், டாக் டர் பி தனசேகர ராஜா கூறியதாவது:

2021-ம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு தினத்தை தன்னைப் பாதுகாத்தல் மற்றும் இன்னொருவரை பாதுகாத்தல் என் கிற தலைப்பில் கொண்டாட லாம் என்று தற்போதைய தேசிய எலும்பியல் சங்கத் தலைவர் டாக் டர் பி. சிவசங்கர் அறி வித்துள்ளார்.

சாலை விபத்து நடந்து முதல் ஒரு மணி (கோல்டன் ஹவர்) நேரத்தில் சரியான முத லுதவி கிடைக்காமல் பலர் இறக்கின்றனர்.

சரியான முதலுதவி மற்றும் அடிப் படை லைப் சப்போர்ட், விபத்து நடந்தவுடன் நோயாளிக்கு கிடைக்கும் தொடர்பு தற்போது இல்லை.

இதற்காக இந்திய எலும்பியல் சங்கம் ஒரு லட்சம் மாணவர்கள், காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு இந்த எலும்பு மற்றும் மூட்டு வாரத்தில் சாலை விபத்து நடந்த உடன் எவ்வாறு முதலுதவி அளித்து மருத் துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்கிற பயிற்சி அளித்து அவர்களின் உயிர் இழப்பை தடுப்பவர்களாக மாற்ற திட்டம் வகுத் துள்ளனர்.

இந்த உயிர் இழப்பை தடுக்கும் பயிற்சிக்கு பல பள்ளிகளிலிருந்து மாண வர்கள் வர இருக்கின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்முறைப்படுத்துதல் போன்றவை ரோட்டரி கிளப்புடன் இணைந்து மேட்டுப்பாளையம் சாலையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதைத்தவிர, எலும்பு மற்றும் மூட்டு வாரத் தில் பிரபலமடைந்த நிபு ணர்கள் தேசிய எலும்பியல் சங்க உறுப்பினர்களுக்கு வலைதளம் மூலம் பல தலைப்புகளில் பேச உள்ளனர்.

ஆகஸ்ட் 3-ம் தேதி சுய ஆரோக்கியம் என்கிற தலைப்பில், பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், 4-ம் தேதி அலுவலக வேலையையும் தினசரி வாழ்வையும் சமன் செய்தல் என்கிற தலைப்பில் பேராசிரியர் எஸ். ராஜ சேகரன், 5-ம் தேதி அலுவல் வேலை யைத் தாண்டிய சொந்த வாழ்க்கை என்கிற தலைப்பில் டாக்டர் விஜய் போஸ், 6-ம் தேதி பொருளாதார நிலை என்கிற தலைப்பில் பேச உள்ளனர். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...