Home தமிழ்நாடு கொரோனா நிவாரண உதவி சாய்பாபா காலனி ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பு வழங்கிய திமுக

கொரோனா நிவாரண உதவி சாய்பாபா காலனி ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பு வழங்கிய திமுக

கோவை மாநகர் மேற்கு மாவட்டம், சாய்பா பாகாலனி பகுதி தி.மு.க. சார்பாக ஒண்றிணைவோம் வா திட்டத்தில் அந்த பகுதி பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

கொரோனா கால பேரிடர் காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒண்றிணைவோம் வா எனும் திட்டத்தில் உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் அவரது ஆணைப்படி, கோவை தி.மு.க மாநகர் மேற்கு மாவட்டம், வடக்கு சட்டமன்ற தொகுதி, சாய்பாபாகாலனி பகுதி தி.மு.க. சார்பாக 11 வது வட்டம் கே.கே.புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அடங்கிய மளிகை தொகுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இதில் சாய்பாபாகாலனி பகுதி பொறுப்பாளர் கே.எம்.ரவி தலைமை தாங்கினார்.

கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தி.மு.க. கொடியேற்றி விழாவை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினர்.

இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் நந்தகுமார், பகுதி, பொறுப்பு குழு, வட்டக்கழகம், கிளை நிர்வாகிகள் நடராஜன், சுக்குருல்லா பாபு, கண்ணன், வினோத், தனபால், அமீன், சிராஜுதீன், பத்மநாபன், ஆறுமுகம், ஜே.பி.கண்ணன், ஹரீஷ், பாதல், இசாக், நஸ்ருதீன், வதம்பை சீனி, வரதராஜ், பைசல், பாபு, சேக் முகம்மது மற்றும் வட்டபிரதிநிதிகள் செல்லையன், அருணாச்சலம், ஷ்யாம், சுப்ரமணியம், குமரேசன் உட்பட மகளிர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...