தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 12,820 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் மீது நீங்கா பற்றும், பாசமும் கொண்டிருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். உடல் ஊனமுற்றவர்கள் என்று சொல்கிறபோதே அவர்கள் மன அளவில் பாதிப்புக்குள்ளாவதை மாற்றி, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் சூட்டி, அவர்களது நலன் காத்திட மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தை உருவாக்கி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக்காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காகத் தனித் துறையை உருவாக்கினார்.
திட்டங்கள் பல
தொழுநோய் இரவலர் மறுவாழ்வுத் திட்டம், கண்ணொளி வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், அலுமினியத் தாங்கிகள் உள்ளிட்ட கருவிகள் வழங்கும் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத் திட்டம், மாத ஓய்வூதியத் திட்டம், பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை, கல்வி உதவித்தொகை, கல்லூரிகளில் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
ரூ.62.50 கோடி ஒதுக்கீடு
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில், மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென 01.09.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் முதல்வர் அறிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கிட ஆணையிட்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2021-2022-ம் நிதி ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி 1401 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 4129 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளும், கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1053 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.2.17 கோடி பராமரிப்பு உதவித்தொகையும், 40% மேல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4318 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.8.44 கோடி பராமரிப்பு உதவித்தொகையும், 40% தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 107 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.20.34 இலட்சம் பராமரிப்பு உதவித்தொகையும், 40% மேல் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 326 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.68.46 இலட்சம் பராமரிப்பு உதவித்தொகையும், 40% மேல் முதுகு தண்டுவடம் நாள் பட்ட நரம்பியல் நோய் மற்றும் பாரகின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 74 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.14.44 இலட்சம் பராமரிப்பு உதவித்தொகையும், கல்வி உதவித்தொகை வழங் கும் திட்டத்தின் கீழ் 384 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.07 இலட்சம் கல்வி உதவித் தொகையும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61,000- மும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 50 மாற்றுத்திறனா ளிகளுக்கு ரூ.12.17 இலட்சம் வங்கிக் கடன் மானியமும், ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க 6 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.3 இலட்சம் மானியமும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 5% பங்கு தொகையினை அரசே வழங்கும் திட்டத்தின் கீழ் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.25,000 நிதியுதவியும், தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் மூலம் வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 216 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 கோடி வங்கி கடன் உதவியும், மாற்றுத்திறனாளி நபர்களை நல்ல நிலையில் உள்ள நபர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 இலட்சம் திருமண நிதி உதவியுடன் தலா 8 கிராம் தங்க நாணயமும், சட்டக்கல்வி பயின்று பார்கவுன்சில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் நிதி உதவியும், மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 இலட்சம் மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 இலட்சம் மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், மாற்றுத் திறனா ளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33.76 இலட்சம் மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரங்கள் பொ ருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத் தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33 இலட்சம் மதிப்பீட்டிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், பார்வையற்ற மற் றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டிலான பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு தக்க செயலியுடன் கூடிய கைபேசிகளும், மாற்றுத்திறனாளி களுக்கு காதொலிக்கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.85 இலட்சம் மதிப்பீட்டிலான காதொலிக்கருவி களும், 0 முதல் 6 வயது வரையுள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட 22 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.3.64 இலட்சம் செலவில் ஆரம்ப நிலை பயிற்சிகளும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிக்கு உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 85 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.42 இலட்சம் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மானியமும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிக்கு உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.11 இலட்சம் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மானியமும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய 2 இல்லங்கள் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22.14 இலட்சம் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மானியமும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு 2 இல்லங்கள் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24.29 இலட்சம் உணவூட்ட செலவினம் மற்றும் ஊதிய மானியமும், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தில் உள்ள 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.23 இலட்சம் செலவில் பாரமரிப்பு மையத்திற்கு பணியால் ஊதிய மானியம் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கான நிதியுதவியும் என மொத்தம் 12,820 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கனவு லட்சியத்தை நிறைவேற்ற
பட்டதாரிக்கு பிரத்யேக ஸ்கூட்டர்
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், கடகத்தூர் ஊராட்சி, பச்சினம்பட்டி கிராமம், செல்லியம்பட்டியில் வசித்து வருகிறார் தே.இராஜகோபால். விபத் தினால் முதுகு தண்டுவடம் பாதிக் கப்பட்டு இடுப்பிற்கு கீழ் முழுவதும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. அவர் தெரிவித்ததாவது:
எனது அப்பா தேவராஜ். எனது தாயார் பாஞ்சாலி. எனக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர். எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம், என் தாய் தந்தை படிக்காதவர்கள். அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து, படித்து பட்டதாரியாக வர வேண்டும்.
நல்ல வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டி தாய், தந்தையை கஷ்டப்படுவதில் இருந்து காப்பாற்ற வேண்டும். சகோதர, சகோதரிகளையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை சிறு வயதிலிருந்தே இருந்து வந்தது. இதுவே இலட்சியமாகவும், கனவாகவும் இருந்தது.
கடந்த 2018-ம் ஆண்டில் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது வாகன விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடம் அடிபட்டு கடுமையாக பாதிக்கப்பட்டேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை சரியானபோதும், முதுகு தண்டுவடம் அடிபட்டு கடுமையாக பாதிக்கப்பட்டதால், இடுப்பிற்கு கீழ் முழுவதும் செயல் இழந்து விட்டது. இதனால் நடக்க இயலவில்லை.
தற்போது நான் 75% பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அடுத்தவர் உதவியின்றி என்னால் தனியாக சுய தேவைகளை கூட செய்ய இயலாத நிலையில் உள்ளேன். எனது உடம்பில் இடுப்பிற்கு கீழ் முழுவதும் செயல் இழந்து விட்டாலும் என்னுடைய கனவை, இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை என்னுள் மிக அதிகமாக இருந்து கொண்டே இருந்தது.
இதனால் படிப்பு தடைபடக் கூடாது என்று எண்ணி தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன். பி.ஏ. பட்டம் பெற்றேன். எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவானேன். படித்து எம்.ஏ., பி.எட். பட்டமும் முடித்துள்ளேன்.
இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டும் என்றால் தந்தையோ, சகோதரனோ அல்லது நண்பர்களோ அழைத்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இது மிகுந்த மன வருத்தத்தையும், மன வேதனையையும் கொடுத்து வந்தது.
நன்றாக ஓடி, ஆடி, நடந்து திரிந்த எனக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்ற கவலையும், என்னுள் இருந்த இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்ற மன வேதனையும் நாள்தோறும் இருந்து கொண்டே இருந்தது.
நான் கஷ்டப்பட்டாலும் பிறரையும் கஷ்டப்படுத்துகிறேனே என்ற கவலையும், இந்த நிலை எப்போது மாறும். பிறர் உதவி இன்றி தனியாக சென்று வர, வேலைக்கு செல்ல ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருந்தேன்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட ஆணையிட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்தேன்.
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரூ.1 இலட்சம் மதிப்பீட்டிலான பெட்ரோல் ஸ்கூட்டர் கிடைத்தது.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எளிதாக வெளியில் சென்று நண்பர்களுடன் சேர்ந்தும், நூலகங்களுக்குச் சென்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தொடர்ந்து தயார்படுத்தி வருகிறேன். நிச்சயம் வெற்றிபெற முடியும், கனவும், இலட்சியமும் நிறைவேறும் என்ற நம்பிக்கை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு எனது சார்பாகவும், என்னைப்போன்ற முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகள் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
செயல் இழந்தன கால்கள் சுய தொழிலுக்கு உதவின கைகள்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகள் கா.சித்ரா (வயது 37). இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. அவர் தெரிவித்ததாவது:
தாயார் ஜெயகாந்தா. தாய், தந்தையருடன் வசித்து வருகிறேன். எனக்கு மாதேஸ்வரன், வேலு, சரவணன், சுரேஷ் ஆகிய 4 மூத்த சகோதரர்கள் உள்ளனர். இரு கால்களும் இளம்பிள்ளை வாதத்தால் 75% மேல் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆனேன். இதன் காரணமாக என்னால் நடக்க இயலாமலும், பிறர் உதவியின்றி எந்த வேலையும் செய்ய இயலாமலும் இருந்து வந்தேன்.
ஏதாவது ஒரு சுயதொழில் செய்து வருமானம் ஈட்டி அதன் மூலம் என் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும். யாருக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் உதவி வேண்டி விண்ணப்பம் வழங்கினேன். முதலில் எனக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.2000/- கிடைத்தது. சுயதொழில் செய்தால் நல்ல வருமானம் கிடைக்குமே என்று எண்ணி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டேன்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து வருவாய் ஈட்டுவதற்காக தமிழ்நாடு அரசின் மூலம் ரூ.25,000/-வங்கிக் கடன் மானிய நிதி உதவியும், நல்லம்பள்ளி இந்தியன் வங்கிக் கிளையின் மூலம் ரூ.75,000/- கடன் உதவியும் கிடைத்தது.
இந்த 1,00,000/- ரூபாய் நிதியின் மூலம் சொந்தமாக விதவிதமான மண் உண்டியல்கள் மற்றும் வண்ண பொம்மைகள் தயார் செய்து வருகிறேன். நல்ல இலாபம் கிடைக்கிறது. கால்கள் செயலிழந்தாலும், கைகள் நன்றாக இருப்பதால் தன்னம்பிக்கையுடன் இப்பணிகளை செய்து வருகிறேன்.
நான் செய்யும் மண் உண்டியல்கள் மற்றும் மண் பொம்மைகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது.
இதனால் நான் உற்பத்தி செய்யும் பொருட்கள் அதிக விற்பனையும் ஆகிறது. நான் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளியில் அனுப்புவதற்கு பிறர் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை இருந்தது. எனக்கென்று தனியாக ஒரு இருசக்கர வாகனம் இருந்தால், வெளியில் சென்று இன்னும் அதிக ஆர்டர்களை எடுத்து, வருமானத்தையும் ஈட்டலாம் என எண்ணினேன்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னைப்பேன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட ஆணையிட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பம் வழங்கினேன். ரூ.78,500/- மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் எனக்கும் கிடைத்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னுடைய சுயதொழிலை மேலும் விரிவுபடுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும் வேண்டுமென்ற கனவும் நிறைவேறியது. இந்த ஸ்கூட்டரில் தனியாக சென்று வருகிறேன். அதிக மண் ஆர்டர்களை எடுத்து உற்பத்தியையும் அதிகப்படுத்தி உள்ளேன்.
தயாரிக்கும் மண் உண்டியல்கள், வண்ண பொம்மைகள் தருமபுரி மாவட்டம் மட்டும் அல்லாது சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வருமானத்தை கொண்டு யாருக்கும் எவ்வித கஷ்டமும் கொடுக்காமல், வயதான தாய், தந்தையருக்கு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.
சுய தொழில் செய்து, தனி வருமானத்தை ஈட்டுகிற வாய்ப்பினை உருவாக்கி தந்து, தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல்வருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தன்னம்பிக்கையோடு பால் வியாபாரம் வருமானத்தால் மிளிர்ந்தது மகிழ்ச்சி
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி அஞ்சல், பாலசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருகிறார் சி.சின்னப்பையன். விபத்தினால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் முழுவதும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. அவர் தெரிவித்ததாவது:
எனது அப்பா காலமாகிவிட்டார். தாயார் கண்ணம்மாள். தாயாருடன் வசித்து வருகிறேன். எனக்கு சரவணன், அண்ணாதுரை ஆகிய 2 மூத்த சகோதரர்கள் உள்ளனர்.
கடந்த 1995-ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தில், முதுகு தண்டுவடம் அடிபட்டு கடுமையாக பாதிக்கப்பட்டேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், இடுப்பிற்கு கீழ் முழுவதும் செயல் இழந்து விட்டது. இதனால் என்னால் நடக்க இயலவில்லை.
தற்போது நான் 85% பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அடுத்தவர் உதவியின்றி தனியாக சுய தேவைகளை கூட செய்ய இயலாத நிலையில் இருந்து வந்தேன். அதிகம் படிக்காத காரணத்தால் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் கூலி வேலைகளுக்கு சென்று வந்தேன். இவ்விபத்துக்குப் பின் தனியாக செல்ல முடியவில்லை. இதனால் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்தேன்.
தாய் அல்லது சகோதரர்களின் உதவியை நாடி வந்த நிலை இருந்து வந்தது. நான், சுதந்திரமாக ஓடி, ஆடி, வேலைகளை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தாயாரிடம் வழங்கினேன்.
அப்போது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் விபத்து ஏற்பட்டு, முதுகு தண்டுவடம் செயலிழந்து நடக்க இயலாத சூழ்நிலையில், குடும்பத்திற்கும் பாரமாக இருக்கிறேனே என்ற மன வருத்தத்தோடு இருந்து வந்தேன். எப்படியாவது வெளியில் வேலைக்கு சென்று, வருமானம் ஈட்டி அதன் மூலம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.
வெளியில் செல்வதற்கு வாகனம் இருந்தால் உதவியாக இருக்கும். ஆனால் அத்தகைய இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வசதியில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.2000/- பெற்று வருகிறேன். ஏழ்மையான குடும்பம். இந்த நிலை எப்போது மாறும், வறுமை எப்போது நீங்கும் என்றும் ஏங்கிக் கொண்டிருந்தேன்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட ஆணையிட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பம் வழங்கினேன்.
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரூ.1 இலட்சம் மதிப்பீட்டிலான பெட்ரோல் ஸ்கூட்டர் எனக்கும் கிடைத்தது. இது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் யாருடைய உதவியும் இன்றி வெளியில் சென்று வருகிறேன். எனது கனவை நனவாக்கும் வகையில் தன்னம்பிக்கையோடு பால் வியாபாரமும், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்னணு சாதனங்கள் பழுது நீக்கும் பணிகளையும், வயர் கூடைகள் பின்னுதல், கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள் திரித்தல் போன்ற பல்வேறு பணிகளையும் செய்து வருகிறேன்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, தாயாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். வருமானத்தை ஈட்டுகின்ற வாய்ப்பினை உருவாக்கி தந்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல்வருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு:
மு. அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தருமபுரி மாவட்டம்.