Home தமிழ்நாடு கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மலைவாழ் குழந்தைகளின் கற்றல்திறனை மேம்படுத்த நூலகங்கள் அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள்

கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மலைவாழ் குழந்தைகளின் கற்றல்திறனை மேம்படுத்த நூலகங்கள் அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள்

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக நூலகங்களை அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஓர் ஆண்டு காலத்திற்கும் மேலாக மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வி, திறன்களை மேம்படுத்த நூலகம் ஒன்று இருந்தால் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

அவர்களுக்காக இந்த வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றி வரும் தன்னார்வலர் லட்சுமணன் திட்டமிட்டி ருந்தார். இதற்காக முதலில் ஒருநூலகத்தை அமைத்துத் தர பல நன் கொடையாளர்களை சந்தித்தார்.

அவரது முய ற்சிக்கு பலன் கிடைத்தது.
ஒரு நூலகம் அமைக்க முயற்சித்தவருக்கு பலரின் பங்களிப்புகளால், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பழங்குடி குடியிருப்புகளில் நான்கு நூலகங்களை தொடங்குவதற்கான வழிகள் கிடைத்தன.

இந்த நூலகங்களை செயல்படுத்துவது தனது நீண்ட கால கனவு எனக் கூறும் லட்சுமணன், மேலும் அவரது எண் ணங்களை பகிர்ந்து கொண்டார்.
நான்கு பழங்குடி கிரா மங்களை அடையாளம் கண்டுள்ளோம்.

நீலகிரி மாவட்டத்தில் கோத் தகிரிக்கு அருகில் உள்ள செம்மனாரை, சத்தி யமங்கலத்தில் காளி திம்பம், கோவையில் ஆனைகட்டி மற்றும் ஆலமரமேடு பகுதியில் நூலகங்களை அமைக்க தேர்ந்தெடுத்தோம்.

இங்கு நூலகங்கள் அமைக் கப்படுவதால், அருகில் உள்ள கிரா மங்களைச் சேர்ந் தோருக்கும் பயன் அளிக்கும்.குழந்தைகள் எழுத் தாளர் உமாநாத் செல்வன் ஒவ்வொரு நூலகத்திற்கும் சுமார் 200 புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.

அத்துடன் எழுது பொருள், வண்ண பென்சில்கள், ரப்பர், பிளாஸ்டிக் போர்டுகள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் என ஏராளமானவற்றையும் அவர்வழங் கினார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன், கருப்பு பலகைகளை நன் கொடையாக அளித்தார்.

தன்னார்வலத் தொ ண்டரான வெங்கடேஷ், கணினிகளை வழங்கினார்.
கோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான நிதி உதவியும், கற்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்தது.

தற்போது கொரோனா நோய் தொற்று பரவலாக உள்ளதால், அக்குழந்தைகள் கல்வி பயில, வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள தேர்ந்தெடுத்த நான்கு இடங்களில் தற்காலிக வசதிகளைக் கொண்டு நூலகத்தை அமைத்துள்ளோம்.

எனவே, இந்நூலகங்கள் நிரந்தரமாக இயங்கவும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் இருக்கவும் மாவட்ட நிர்வாகங்கள், அப்பகுதியில் நிரந்தர நூலகம் அமைக்க இடவசதியை ஏற்படுத்தித் தர முன்வர வேண்டும் என பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண் தன்னார்வலர் மாலதி கேட்டுக் கொண்டார்.

இது போன்ற நூலகங்கள் வருங் காலத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கும், புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும் அம்மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார் அவர்.

நூலகங்களுக்கு வழங் கப்படும் புத்தகங்களை சேமித்து பாதுகாப்பாக வைத்திருக்க ஒர் இடம் ஒதுக்கித் தரப்பட வேண்டும்.

நூலகங்கள் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பல இளம் இதயங்களுக்கு நல்ல கருத்தை விதைத்து, கல்வியாளர்கள், எழுத் தாளர்கள், கலைஞர்கள், கதை சொல்லிகள் என பல தரப்பட்டவர்களை உருவாக்க உதவும் என்கிறார் வள்ளி.

இப்பணியில் லட்சுமணன் மற்றும் மலைவாழ் கிராம தன்னார்வலர்கள் மாலதி, வள்ளி உள்ளிட்ட நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...