Home தமிழ்நாடு பேரூர் பெரியகுளத்தில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

பேரூர் பெரியகுளத்தில் மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வாட்டர் வாரியர் எனும் விருது வழங்கியது.

இந்த விருதுடன், விருது தொகையாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த விருது தொகை யுடன் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு, பேரூர் பெரியகுளக்கரையில் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும், அமைப்பின் 200வது வாரக் களப்பணியும் நடந்ததையடுத்து, அதில் 200 வகை யான மரக்கன்றுகள் வைத்து, மியாவாக்கி முறையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இதற்கு வாட்டர் வாரியர் அடர் வனப்பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்காக குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட 25 லோடு ஆகாயத்தாமரை கழிவுகளை அடியுரமாக கொட்டப்பட்டு, மூன்று பக்கங்களுக்கு வேலியிட்டு செடிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 6.5 லட்சம் ரூபாய் செல விடப்பட்டுள்ளது.
200 வகையான மரக்கன்றுகள் தமிழகம் மற்றும் கேரளாவின் பல் வேறு பகுதிகளிலிருந்து நாட்டு வகை மரங்கள் சேகரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டன.

இந்நிகழ்வில் தன்னார் வலர்கள், விரைவு அதிரடிப் படையினர், மற்றும் என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் மரக் கன்றுகள் நட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...