Home தமிழ்நாடு கோவையில் முதன் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி பணி திட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

கோவையில் முதன் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி பணி திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்கும் பணி முதல் முறையாக கோவை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை மாவுத்தம்பதி ஊராட்சி பழைய வாளையார் ரோடு அருகே ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கொசு உற்பத்தியாகும் இடங்கள் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டனர்.

ஜிகா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கேரள மாநில எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகிய துறைகள் இணைந்து கேரள மாநிலத்திலிருந்து இ பதிவு மூலமாக பயணிக்கும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுவதை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
முதல்வர் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வகை வைரஸ் பரவல்?
இந்நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா வைரஸ் என புதிய வகை வைரஸ் தொற்றுகள் பிற மாநிலங்களில் பரவி வருகின்றன.

ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தை, உடல் நலக்குறைவுடன் பிறப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வர் தமிழகத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் பிறபகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது தொற்று பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இந்த வைரஸ் தொற்று பரவல் ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தர விட்டார்.

விழிப்புணர்வு
அதன்படி, வாளையார் எல்லைப்பகுதிகளில் உள்ள மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய தெரு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்விழிப்புணர்வானது இங்கு மட்டு மல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கான விழிப்புணர்வு ஆகும்.

பிளாஸ்டிக், உடைந்த பொருட்கள், தேங்காய் ஒடு, டயர் போன்றவற்றில் தேங்கி இருக்கும் சிறிய அளவிலான தண்ணீர் தான் இந்த ஏடிஸ் வகை கொசுவானது உற்பத்தி ஆகிறது.

இவை டெங்கு, சிக்குன் குனியா போன்ற பல்வேறு நோய்களை உருவா க்குவதற்கு காரணமாக உள்ளது.

வாளையாரில் தடுப்பு நடவடிக்கை
தற்போது ஜிகா வைரஸ் பரவுவதற்கும் இக்கொசுக்களே காரணமாக உள்ளன.
இதன் காரணமாக சுகாதாரத் துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதின் அடிப்படையில் வாளையார் பகுதியில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் வட்டாரத்திற்கு 20 நபர்கள் ஊராட்சிக்கு 10 நபர்கள் மற்றும் மாநகராட்சி நகராட்சிக்கு தேவையின் அடிப்படையில் பணியாளர்களை நியமித்து கொசு மருந்து அடிப்பது தெளிப்பது என பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பணியில் தமிழ்நாடு முழுவதும் 21,000 பணியாளர்கள் 14,833 சிறிய வாகனங்களில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னரே கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏடிஸ் கொசுக்கள்
ஏற்கனவே இங்குள்ள சுகாதாரத் துறையினர் ஏடிஸ் கொசுக்களை அதன் லார்வா நிலையிலே அழிப்பதற்கு கம்பூசியா என்ற மீன்களை வளர்த்து அம்மீன்களை நீர்நிலைகளில் விட்டு, கொசு ஒழிப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜிகா வைரஸ் இல்லை
தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் கண்டறியப்படவில்லை. ஆனாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில எல்லைகளிலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மாநில எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாலை வழியாக மாநிலத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல், சளி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றன.

அதிக தடுப்பூசிகள் வழங்கல்
சென்னைக்கு அடுத்த படியாக கோவை மாவட்டத்தில் அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் போடும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.
தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 75 சதவீதத்தை அரசுக்கும், 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கும் ஓன்றிய அரசு வழங்கி வருகிறது.

தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி வழங்கும் பணியின் வேகத்தினை துரிதப்படுத்துவது தொடர்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளுடனான ஆலோசனை நடைபெறுகிறது.

தொழில்நிறுவனங்களின் சிஎஸ்ஆர் பண்ட் மாநில அரசுக்கு சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் கான்சன் ரேட்டர்கள் ஜெனரேட்டர்கள் போன்றவற்றை வழங்கி வந்தன.

இந்நிலையில், சிஎஸ்ஆர் பண்ட் பயன்படுத்தி தனியார் மருத்துவ மனைகளில் தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது.
இதன்மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் 25 சதவீத தடுப்பூசிகள் வாயிலாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடியும் என மருத்துவ வல்லுநர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்கும் பணி முதல் முறையாக கோவை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

சென்னை, திருச்சியிலும்
இது தொடர்பாக சென்னை, திருச்சி போன்ற இடங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனை உரிமையாள ர்களுடனான ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் பணி நடைபெ றும் என்பது மக்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியதாக இருக்கும்.

தடுப்பூசிகள் போட்டுக் கொள் வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
எனவே தடுப்பூசி விரைந்து வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

வாளையார் சோதனைச் சாவடியில் நடந்த ஆய்வின்போது அரசு முதன்மைச் செயலாளர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.கிருஷ்ணா துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சின்னியம் பாளையத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு எவ்வாறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்? விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

கோவை எலும்பியல் சங்கம் வரும் 4-ம் தேதி, எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு, சாலை விபத்து நடந்த உடன், எவ்வாறு முதலுதவி அளித்து மருத்து வமனைக்கு அனுப்ப வேண்டும்...

கோவை மாவட்ட அளவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கேட்டரிங் சயின்ஸ் துறை முதலிடம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை அவுட்லுக் - ஐகேர் 2021 நடத்திய, இந்திய அளவிலான சிறந்த துறைகளுக்கானத் தர...

கொரோனா காலத்தில் உதவி செய்வது மனிதன் மனிதனுக்குச் செய்யும் உதவி கோவையில் கமலஹாசன் பேச்சு

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் தனியார் நிறு வனம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது. இந்த முகாமினை...

கோவை யு.பி.எஸ். சோலார் – ஸ்டெப்லைசர் சங்க புதிய தலைவராக ஏ.கே.காஜாமொய்தீன் பதவி ஏற்றார்

கோவை யு.பி.எஸ். சோலார் மற்றும் ஸ்டெப்லைசர் சங்க 8-வது பொதுக்குழு கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள ஜென்னி கிளப் கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் ராஜகோபால் தலைமை...

கோவை சேரன் மாநகரில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையை மாநகராட்சி ஆணையாளர் தர ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.32க்குட்பட்ட சேரன்மாநகர் 4வது பேருந்து நிறுத்த குறுக்கு சாலை பகுதியில் அமைக்கப்பட்ட தார் சாலையின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி...