மேட்டுப்பாளையம் வட்ட அளவில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாரில் 122 மது பாட்டில்களும் சிக்கின.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியன்று ஒரே கட்டமாக மக்களவைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக் குழுக் கள் சட்டமன்ற தொகுதி வாரி யாக அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மேட் டுப்பாளையம் தென்திருப்பதி நால் ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கேரளாவை சேர்ந்த அரவிந்தன்(45) என்பவரின் காரை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 600 பணம் இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் நேற்று சிறுமுகை கணேசபுரம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.73,650 மற்றும் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் பிளாக் தண்டர் தீம் பார்க் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.51,000 பணம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பறிமுதல் செய்த ரூ.2,25,250 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மேட் டுப்பாளையம் வட்டாட்சியர் அலு வலகத்தில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனி டையே நேற்று காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் பறக்கும் படையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வெள்ளியங்காடு டாஸ்மாக் கடையை ஒட்டி அமைந்துள்ள பாரில் சோதனை செய்த போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட் டது.
இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 122 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட் டில்களை காரமடை போலீசாரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட பாரின் உரிமையாளர் மீதும் புகாரளிக் கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.