fbpx
Homeபிற செய்திகள்122 நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் 152 சேவை அறிமுகம் நிறுத்தப்பட்ட 328 வழித்தடங்களில் 394 பேருந்து சேவை...

122 நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் 152 சேவை அறிமுகம் நிறுத்தப்பட்ட 328 வழித்தடங்களில் 394 பேருந்து சேவை இயக்கம்-இராணிப்பேட்டை மக்கள் முதல்வருக்கு மனமார்ந்த நன்றி!

இராணிப்பேட்டை மாவட்டத்தில், 122 நீட்டிக் கப்பட்ட வழித்தடங்களில் 152 பேருந்து சேவைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோன்று, முன்பு நிறுத்தப்பட்ட சில வழித்தடங்களுள் 328 வழித்தடங்களில் 394 பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 07.05.2021 அன்று பொறுப்பேற்றவுடன், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் பொது போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வகையில் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துவது என்பது மக்களின் கோரிக்கையின் அடிப் படையில் பொதுமக்களின் நன்மைக்காகவும், புதிய பகுதிகளை இணைப்பது போன்ற தொடர்ச்சியான செயல் முறையாகும்.

07.05.2021 முதல் 31.03.2022 வரை 122 நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் 152 பேருந்து சேவைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோன்று, முன்பு நிறுத்தப்பட்ட சில வழித்தடங்களுள் 328 வழித்தடங்களில் 394 பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி ஆற்காடு பணிமனையில் இயங்கும்144B சென்னை-சித்தூர் இயங்கும் தடத்தை பாகாலா வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

444/Q அரக்கோணம் – பெங்களூரு, 444/NA அரக்கோணம்-பெங்களூரு,444 /MA பெங்களூரு – அரக்கோணம்,444/U இராணிப்பேட்டை – பெங்களூரு,307/A பெல் – திருச்சி, 123/K இராணிப்பேட்டை- சென்னை, 444K/A பெங்களூரு – வாழைப்பந்தல், 123/G திமிரி – சென்னை என மொத்தமாக 9 நகர பேருந்துகள் புதிய வழிதடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

T22/A ஆற்காடு – திருப்பாற்கடல் கூடுதல் நடைகளும், T7/D ஆற்காடு- நாராயணகுப்பம் வரை நகர வழித்தடத்திலும், ஜி11 ஆற்காடிலிருந்து அகராவரம் வழியாக பொன்னை செல்லும் பேருந்து மலைமேடு வழியாக (1.5 கி.மீ) நீட்டித்தும் இயங்குகின்றன.

T19/A ஆற்காடு – பானாவரம் 6 நடைகளும், T51/B சோளிங்கர் – நெமிலி இயங்கும் தடத்தை கோடம்பாக்கம் பேருந்து நிலையம் வெளிதாங்கிபுரம் வரை நீட்டித்தும், ஆற்காடு – விளாப்பாக்கம் பேருந்து எண்கள் 160A, 160B, T40/B கூடுதல் நடைகளும்,T34/A ஆற்காடு – சொறையூர் காலனி வரை இயக்கப்பட்டு வரும் தடத்தினை பொண்ணமங்களம் வரை நீட்டித்தும், T7/F விளாப்பாக்கம் – வாலாஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வரையும், T13/BA,T7J வேலூர் – மோத்தக்கல் மற்றும் T3A வேலூர்- வெங்கடாபுரம், காலை மற்றும் மாலை கூடுதல் நடைகளும்,T41/A ஆற்காடு- ஆயிரமங்களம் கலவை (வழி) திமிரி வழியாக இயக்கப்படும் தடத்தில் காலை, மாலை இருவேளைகளிலும் குண்டலேரி வரை கூடுதல் நடைகளும், T42/A, T55/A ஆற்காடு விளாப்பாக்கம் கூடுதல் நடைகளும், T43/B விளாப்பாக்கம் – வாலாஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வரையும், T60/A,B, T40/B ஆற்காடு -விளாப்பாக்கம் கூடுதல் நடைகளும், T40/A ஆற்காடு- கண்ணமங்கலம் வரை இயங்கும் பேருந்து மேல்வல்லம் வரை நீட்டித்தும்,T11/V ஆற்காடு ஆயிரமங்களம் வரை இயங்கும் பேருந்தை சீயாம்பாடி வரை நீட்டித்தும், T37/A ஆற்காடு- துர்கம் இயங்கும் பேருந்து நம்பாரை வழியாக 2 கி.மீ. கூடுதலாக நீட்டித்து என மொத்தமாக 22 பேருந்துகள் புதியவழி மற்றும் கூடுதல் வழிதடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது மற்றும் நெரிசலில் பயணிப்பதை தவிர்த்திட கூடுதல் பேருந்துகளான தடம் எண்கள் T42/A புலிவலம் கூட்டுரோடு -எசையனூர் காலை 2 நடைகளும்,T3/D ஆற்காடு – சோளிங்கர் (வழிவாலாஜா) மதியம் 2 நடைகளும், T4/A ஆற்காடு – சோளிங்கர் (வழி வாலாஜா) 12 நடைகளும், T21/A வாலாஜா – வள்ளுவம்பாக்கம் காலை 2 நடைகளும், 161/A அரக்கோணம்- வேலூர் (வழி வேலம்) 6 நடைகளும், 401/A திருத்தணி- வேலூர் (வழி வேலம்) 6 நடைகளும், 161/A அரக்கோணம்-ஆற்காடு வழி பனப்பாக்கம் 1 நடையும், T19/A ஆற்காடு- பானாவரம் வழி வாலாஜா 4 நடைகளும்,T7/A ஆற்காடு – விஷாரம் விவிணி கல்லூரி வரை காலை 4 நடைகளும், T31/A ஆற்காடு – விஷாரம் வரை மாலை 2 நடைகளும், ஜி31/கி ஆற்காடு – பெல் வரை மாலை 2 நடைகளும், T71/A இராணிப்பேட்டை- வேலூர் வரை மாலை 2 நடைகளும், T43/B ஆற்காடு – திமிரி வரை காலை, மாலை தலா 2 நடைகளும், T7A/Dவாலாஜா- பானாவரம் மாலை 2 நடைகளும், T7t/B ஆற்காடு- விளாப்பாக்கம் காலை, மாலை தலா 2 நடைகளும், T7S/A ஆற்காடு- சாத்தூர் காலை, மாலை தலா 2 நடைகளும், T39/B ஆற்காடு- சோளிங்கர் (வழி.ரெண்டாடி) மாலை 2 நடைகளும் T45/A அரக்கோணம்- நெமிலி வரை காலை, மாலை தலா 2 நடைகளும் என மொத்தமாக 17 கூடுதல் பேருந்துகள் 65 நடைகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

‘முதல் முறையாக பேருந்து வசதி’
புதிய வழித்தட பேருந்துகள் மற்றும் நடை நீட்டிப்பு செய்த பேருந்துகளின் மூலம் பயனடைந்த பயனாளிகள் தெரிவித்ததாவது:

தடம் எண் T7/D நாராயண குப்பம் சென்ற பேருந்து கோவிந்தச்சேரி குப்பம் வரை நீட்டிக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் தெரிவித்ததாவது:

முதல் முறையாக எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடைத்துள்ளது. இதன் மூலம் நாங்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு சென்று வரவும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு சென்று வரவும், வயதானவர்கள் மருத்துவமனைக்கு சென்று வரவும் முடிகிறது.

மேலும், முன்பெல்லாம் வெளியூர் செல்வதாகயிருந்தால் 1 கி.மீ. நடந்து சென்றால் தான் பேருந்து வசதி கிடைக்கும்.

ஆனால் தற்போது நாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே பேருந்து வசதி கிடைத்துள்ளது. இதன் மூலம் எங்களைச் சுற்றியுள்ள 3 கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு இது பயனுள்ளதாக உள்ளது.

வயதானவர்கள் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டுதான் மருத்துவமனைக்கோ அல்லது மற்ற இடத்திற்கோ சென்று வந்தோம். தற்போது அது போன்ற பிரச்சனை எங்களுக்கு இல்லை. இந்த பேருந்து வசதியினை அளித்தமைக்கு முதல்வருக்கு கிராமத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

‘விவசாயிகளுக்கு சிரமம் தீர்ந்தது’
தடம் எண் T37/A துர்க்கம் வரை சென்ற பேருந்து நம்பரை வரை நீட்டிக்கப்பட்டதால் அந்த ஊர் கிராம மக்கள் தெரிவித்ததாவது:

இந்த பேருந்து வசதி மூலம் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், வயதானவர்கள் மருத்துவமனை சென்று வருவதற்கும், வேலைக்கு செல்பவர்கள் சிரமமின்றி சரியான நேரத்திற்கு வேலைக்கு சென்று வரவும், விவசாயிகள் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்வதற்கும் இந்த பேருந்து பயனுள்ளதாக உள்ளது.

இந்த பேருந்து வசதியினை அளித்தமைக்கு முதல்வருக்கு கிராமத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

‘2 கி.மீ. நடைபயணம் குறைந்தது’
தடம் எண் T41/A FIKதிமிரி வழியாக கலவை சென்ற பேருந்து குண்டலேரி வரை நீட்டிக்கப்பட்டதால் குண்டலேரி கிராம மக்கள் தெரிவித்ததாவது:

இதற்கு முன்பு நாங்கள் 2 கி.மீ. நடந்து சென்றால் தான் பேருந்து வசதி கிடைக்கும். தற்போது இந்த பேருந்தின் மூலம் கூலி வேலை செய்பவர்களுக்கும், வெளியூர் செல்பவர்களுக்கும், சிறு குறு விவசாயிகளுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், வயதானவர்கள் மருத்துவமனை சென்று வருவதற்கும், வேலைக்கு செல்பவர்கள் சிரமமின்றி சரியான நேரத்திற்கு வேலைக்கு சென்று வரவும் இந்த பேருந்து பயனுள்ளதாக உள்ளது.

இந்த பேருந்து வசதியினை அளித்தமைக்கு முதல்வருக்கு கிராமத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

தொகுப்பு
செ.அசோக், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img