Home பிற செய்திகள் ஊட்டி மார்க்கெட்டில் தீ & ரூ.2 கோடி சேதம்: அதிமுக சார்பில் 81 கடைகளுக்கு ...

ஊட்டி மார்க்கெட்டில் தீ & ரூ.2 கோடி சேதம்: அதிமுக சார்பில் 81 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து போன 81 கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் நிதியுதவி அதிமுக சார்பில் வழங்கப்படுகிறது.
ஊட்டி நகராட்சிக்கு சொந்த மான மார்க்கெட் பகுதியில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது, 81 கடைகள் தீக்கிரையாயின. தக வல் அறிந்து அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் விரைந்து சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட் டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
நீலகிரி மாவட்ட அதிமுக சார்பாக தலா 5ஆயிரம் வீதம் 81 குடும்பங்களுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் என்று புத்தி சத்திரன் அறிவித்தார். அவருடன் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சிவினோத், ஊட்டி நகர செயலாளர் க சண் முகம், முன்னாள் நகர செயலாளர் ராஜாமுகமது, சூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கர், நகராட்சி ஆணையாளர், நகர பாசறை செயலாளர் அக்கீம்பாபு, ஓ.சி.எஸ் தலைவர்ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
அப்போது பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன். தீ விபத்து குறித்து அறிந்ததும் உள்ளாட்சி துறை அமைச்சர் பாதிக் கபட்ட வணிக மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையானவற்றை உடனடியாக செய்து தர உத்தரவிட்டார். பாதிப்பு குறித்து உள்ளாட்சிதுறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தீயினால் சேதமடைந்த நகராட்சி சந்தையை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி கி.ராமு மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், முன்னாள் அதிமுக நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்பு நகராட்சி ஆணையாளரிடம் இச்சம்பவம் குறித்து கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில்இரவு நேரம் நடந்த இந்த தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் இது பற்றிக் கூறி கடையை இழந்த வியாபாரிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும்`என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

பாடகர் எஸ்.பி.பி. மறைவிற்கு டாக்டர் பால் தினகரன் இரங்கல்

பிலபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவிற்கு இயேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலையின் வேந்தருமான டாக்டர் பால் தினகரன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:...

எஸ்.பி.பிக்கு வித்தியாசமான முறையில் இரங்கல்

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மெழுகுவர்த்தியில் அவர் பாடிய அஞ்சலி...அஞ்சலி என்ற பாடல் வரிகளை பொறித்தும் மைக்கில் எஸ்.பி.பி பெயரை பொறித்தும் கோவை சமூக ஆர்வலர் யு.எம்.டி.ராஜா வித்தியாசமான முறையில் தனது...

எஸ்.பி.பிக்கு மலரஞ்சலி

விடுதலை களம், தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு முன் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் படத்திற்கு விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தெலுங்கு...

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன்,...

எதிரிகளை எதிர்கொள்கிற வல்லமை நம்மிடம் இருக்கிறது

லடாக் எல்லையில் இந்திய பகுதியில் சுமார் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியையும் பாகிஸ்தான் மூலம் தன்னுடன் இணைத்திருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தின்...