Home தமிழ்நாடு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சார்பில் ஐடியா ஆய்வகத்தை அமைப்பதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல்...

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சார்பில் ஐடியா ஆய்வகத்தை அமைப்பதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தேர்வு

புதுடெல்லி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐடியா ஆய்வகத்தை நாடு முழுவதும் உள்ள, AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், கல்லூரியின் நிறுவன மேம்பாட்டு கவுன்சில் மூலம் அமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. புதுமையான யோசனைகள், அவற்றின் உருவாக்கம், மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட வைக்க, ஆராய, அதன் பயனை வெளிப்படுத்த மற்றும் சிறந்து விளங்கச் செய்வதே இந்த ஆய்வகத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் இருந்து தகுதி நிறைந்த 204 கல்லூரி கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தி ருந்தன. இந்த விண்ணப்பங்களை தேசிய வழிநடத்தல் குழு பல மதிப்பீடுகள் மூலமாகவும், நேர்காணல்கள் மூலமாகவும் மதிப்பீடு செய்து இறுதியாக 49 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன.
கோவை வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்த ஐடியா ஆய்வகத்தை தனது வளாகத்தில் அமைப்பதற்கான நிதி உதவியைப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐடியா ஆய்வகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவுவதற்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த கிராப்ட் மேன் ஆட்டோமேஷன் என்னும் முன்னணி தொழில்துறை நிறுவனம் முன்வந்துள்ளது.

ஐடியா ஆய்வகம், சுமார் 5000 சதுர அடி பரப்பளவில், புதுவகை ஆய்வுக்கருவிகள், முப்பரிமாண அச்சுக்கருவிகள் மற்றும் யோசனைகளை உருவாக்கம் முதல் செயல்பாடு வரைக்கும் உதவக் கூடிய ஆய்வுக்கு கருவிகளுடன் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமல் லாது அருகாமையில் உள்ள கல்லூரியின் மாணவர்களும் இந்த ஆய்வகத்தை பயன்படுத்தும் வகையில் 24மணி நேரமும் ஆய்வகம் திறந்திருக்கும்.

ஏற்கனவே கல்லூரியில் இருக்கும் கண்டுபிடிப்பு மையத்தின் கூடு தல் வசதியாக இந்த ஆய்வகம் இருக்கும். கல்லூரியின். கண்டுபிடிப்பு மையம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் ஐந்து நட்சத்திர தரக்குறியீடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்பு

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நஞ்சுண்டாபுரம் பகுதி தி.மு.க. பிரதிநிதிகள் சண்முகம் தலைமையில் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரமத்தில் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி விழா கடந்த 13 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார்: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா...

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...