Home தமிழ்நாடு கோவையில் எய்ம்ஸ்: முதல்வர் கோரிக்கைக்கு எம்.பி வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ்: முதல்வர் கோரிக்கைக்கு எம்.பி வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மேற்கு மண்டலத்தின் மையமாக கோவை மாவட்டம் உள்ளது. மருத்துவ கேந்திரமான மாவட்டமாகவும் கோவை மாவட்டம் திகழ் கிறது. இங்கு கோவை மட்டு மல்லாது திருப் பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்திய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடி அவர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக் கைகள் குறித்த பட்டி யலை அளித்து வலியுறுத்தியுள்ளார்.

இதில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தலும் முக்கியமானது.
கொரோனா மூன்றாவது அலைவரும் அது குழந்தைகளை பாதிக்கும் என்கிற மருத் துவத்துறையினரின் எச்சரிக்கையை உள்வாங் கிக்கொண்டு தற்போது இருந்தே இதற்கான மருத் துவ கட்டமைப்பை உரு வாக்கும் முனைப்பில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்பது அனைவரின் கவனத்தை ஈர்த்த ஒன்று என்பது அரசியல் எதிரிகள்கூட மறுக்க இயலாத ஒன்றாகும். அந்தவகையில் திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் இதற்கான நடைமுறைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது மகிழ்வை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என இந்திய ஒன்றியத்தின் பிரதம அமைச்சரிடம் வலியுறுத்தி யுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இதனை கோவை மாவட்ட மக்களின் சார்பில் தமிழ்நாடு முதலமைச் சருக்கு நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையின் நியாயத்தை ஒன்றிய அரசு உணர்ந்து உடனடியாக அதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்பு

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நஞ்சுண்டாபுரம் பகுதி தி.மு.க. பிரதிநிதிகள் சண்முகம் தலைமையில் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரமத்தில் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி விழா கடந்த 13 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார்: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா...

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...