Home தமிழ்நாடு கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த வாடிக்கையாளர்களுக்கு ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் கர்கர் ரேஷன் திட்டம்

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த வாடிக்கையாளர்களுக்கு ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் கர்கர் ரேஷன் திட்டம்

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் அறிவித்துள்ளது “கர் கர் ரேஷன்” திட்டம். இது, கோவிட்19 காரணமாக வாழ்வாதாரங்கள் பாதிக் கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக நிதியளிக்கும் திட்டமாகும்.

“கர் கர் ரேஷன்” என்பது கோவிட் பாதிக் கப்பட்ட குறைந்த வருமானமுள்ள 50,000 ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க, ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட வருமானத்தில் இருந்து பங்களித்து வாடிக் கையாளர் கோவிட் பராமரிப்பு நிதியை அமைத் துள்ளனர்.
இந்த நோக்கத்திற்காக வங்கி ஊழியர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்திலிருந்து ஒரு நாள் ஊதியத்தை பங்களித்தனர்.

இந்த ரேஷன் கிட்கள் வங்கியின் தனிப்பட்ட பாணியுடன் வாடிக்கையாளர்களின் வீடுகளில் நேரடியாக வழங்கப்படுகின்றன. கிராமப்புறங்களில், வங்கி ஊழியர்கள் தாங்களே நேரில் சென்று ரேஷன் கிட்களை வழங்குகின்றனர். மற்றும் நகர்ப்புற இடங்களில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 1800 ரூபாய் மதிப்புள்ள ப்ரீ-பெய்ட் கார்டு களை ஊழியர்கள் வழங்கு கின்றனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளையை நேரடியாக தொடர்பு கொண்டு, இந்த திட்டத்தின் கீழ் உதவியைப் பெறலாம்.

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வி. வைத்தியநாதன் கூறுகையில், எங்களின் “கர் கர் ரேஷன்” திட்டத்தின் கீழ், ஒரு கோவிட் வாடிக் கையாளர் பராமரிப்பு நிதியை உருவாக்க, ஒரு நாளின் சம்பளத்திலிருந்து ஒரு மாத சம்பளம் வரையான மாறுபட்ட தொகையை எங்கள் ஊழியர்கள் வழங்கினர். எங்கள் வங்கியில் “வாடிக் கையாளர் தான் முதல்” என்ற தத்துவத்தில் நாங்கள் இயங்கி வருகிறோம், என்றார்.

ஊழியர் குடும்பத்தின் மெடிக்ளெய்ம் காப்பீட்டை 24 மாதங்களுக்கு நீட்டித் தல். பட்டப்படிப்பு வரை 2 குழந்தைகளுக்கு மாதந் தோறும் 10,000 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை. தகுதி அடிப்படையில் வாழ்க்கைத் துணைக்கு வேலைவாய்ப்பு.

வேலை வாய்ப்பை உபயோகித்துக் கொள்ளாத அல்லது அதைப் பெற தகுதி இல்லாத வாழ்க்கைத் துணைக்கு 2 லட்சம் மதிப்புள்ள திறன் பயிற்சி உரிமை. 30,000 ரூபாய் வரை ஈமச்சடங்கு செலவுகள். குடும்பத்துக்கு இடமாற்ற உதவியாக ரூ.50,000. இந்த ஆண்டு பணி செய்த காலத்துக்கென சார்பு விகித போனஸ் பேஅவுட். பாதிக்கப்பட்ட குடும் பத்திற்கான தனிப்பட்ட நிதி ஆலோசனை. ஊழியர்களின் குடும்பத்தில் எவருக்கேனும் தொற்று உண்டானால், எதிர்பாராத செலவுகளை சந்திக்க, ஊழியர்களுக்கு ஊதிய அட்வான்ஸாக ரூ. 3 லட்சம் வரை 0% ROI-ல் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்பு

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நஞ்சுண்டாபுரம் பகுதி தி.மு.க. பிரதிநிதிகள் சண்முகம் தலைமையில் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரமத்தில் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி விழா கடந்த 13 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார்: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா...

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...