fbpx
Homeபிற செய்திகள்11 வயது பள்ளி மாணவி யோகாவில் உலக சாதனை

11 வயது பள்ளி மாணவி யோகாவில் உலக சாதனை

கந்தபெருந்தாசனத்தில் இருந்து சக்ரா பந்தாசனத்துக்கு ஒரு நிமிடத்தில் 28 முறை நகர்ந்து மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார் 11 வயது பள்ளி மாணவி.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த டி.சரவணன், எஸ்.மலர்விழி தம்பதியின் மகள் டி.எஸ். ஜோதிஷா. கவரிப்பேட்டை ஆர்.எம்.கே.பாடசாலை பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் உள்ள ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஐந்து ஆண்டுகளாக பயின்று வருகிறார் டி.எஸ்.ஜோதிஷா.

ஒரு நிமிடத்தில் 28 முறை கந்தபெருந்தாசனத்தில் இருந்து சக்ரா பந்தாசனம் வரை சென்று உலக சாதனை படைத்தார்.இவரின் சாதனை, “இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்”, “வேர்ல்ட் வைட் புக் ஆஃப் ரெக்கார்ட்”, “அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு” ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

சாதனை படைத்த மாணவி ஜோதிஷா, அவரது யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை சக மாணவர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img