கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நஞ்சனாபுரம், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும்100 சதம் சிறப்பான தேர்ச்சியை அடைந்தனர். தேர்வு எழுதியவர்களில் 591 மதிப்பெண்கள் பெற்று சன்மதி முதலிடமும், 586 பெற்று ஸ்ரீ தன்வந்த் இரண்டாமிடமும், 581 பெற்று யோகவர்ஷினி மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வு
எழுதியவர்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்களும் பெற்றுள்னர். கணிணி அறிவியல் 3 மாணவர்கள், கணிணி பயன்பாடுகள 2 மாணவர்கள், வேதியியல், கணிதம;, வணிகக்கணிதம், வணிகவியல், பொருளியல் பாடங்களில் தலா ஒரு மாணவரும் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றனர். பள்ளியின் சராசரி மதிப்பெண் 80.5சதவீதம் ஆகும்.
பள்ளி டிரஸ்டின் தலைவர் டாக்டர் சு.குமாரசுவாமி, செயலாளர் P.சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், பள்ளியின் தாளாளர் தேவராஜா, முதல்வர் மு.மைதிலி மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.