ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பள்ளியில் நடைபெற்ற 107வது நிறுவன தினவிழாவில் மாணவ, மாணவிகளின் தனிதிறமைகளை வெளிகாட்டிய அறிவியல் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது.
பள்ளியின் முதல்வர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிறுவனர் தினவிழாவில் நஞ்சன்கூட் ஜெ.எஸ்.எஸ் கலைகல்லூரி துணை பேராசிரியர் ஹன கௌடா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அறிவியல் கண்காட்சி குறித்து கூறிய பள்ளி முதல்வர் நந்தகுமார், மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை வெளி கொணரும் வகையில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.
இதில் மாணவ மாணவிகள் ஆவலோடு கலந்து கொண்டு அனைவரும் பாரட்டும் வண்ணம் தங்களின் திறமைகளை அனை வருக்கும் உணர்த்தினர். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள், என கூறினார்
இந்த நிறுவனர் தின விழாவில் பெற்றோர்கள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்