fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நோய் பரவலை தடுக்க சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

கொரோனா நோய் பரவலை தடுக்க சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

சுய கட்டுப்பாடுடன் இருந்து, கொரோனா தொற்று நோயின் தாக் கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேட்டுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்திற்கு உட்பட்ட முத்தூர், வெள் ளக் கோவில் மற்றும் காங்கேயம் பகுதிகளில், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஏ.எம்.சி பல் நோக்கு மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா தடுப்புசி முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினீத் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் நிருபர்களிடம் தெரி வித்தாவது :

திருப்பூர் மாவட்ட இந்திய தொழில் கூட்ட மைப்பு திருப்பூர் ஏஎம்சி மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து 1200 நபர் களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு, பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து, நமது மாவட்டத்திற்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா நோய் தொற்று மனித இனத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த தொற்றின் காரணமாக கடந்த சில காலங்களில் மனித வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோய் தொற்று உச் சகட்டமாக இருந்தது. இதை அடுத்து ஊரடங்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் முதல்வர், தினசரி நோய் தொற்று 26000 என இருந்ததை தினசரி 2000 என்ற அளவிற்கு கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தி உள்ளார்.

கொரோனா நோய் தொற்றை கட்டுப் படுத்தியதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

பொதுமக்கள் தற்போது இருக்கும் சூழ்நிலை யில், அரசு தளர்வுகள் கொடுத்து விட்டது என சுதந்திரமாக இருக்காமல், ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம்செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல், அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி கொரோனா நோய் தொற்றை முழுவதும் ஒழிக்க அரசிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

கொரோனா நோய்தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள், தாங்களே மருத்துவம் பார்ப்பதை விடுத்து, மருத்துவர் ஆலோ சனையை பின்பற்றி மருத் துவமனையில் முறையான சிகிச்சை மேற்கொள்ளவது தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கொரோனா நோய் தொற்று முழுமையாக கட் டுப்பாட்டுக்குள் வரும் வரை ஒவ்வொரு குடிமகனும் சுயகட்டுப்பாட்டுடன் இருந்து நோயின் தாக்கத்தை அடுத்தகட்டத்திற்கு செல்லாமல் அரசிற்கு ஒத் துழைப்பு தர வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img