fbpx
Homeபிற செய்திகள்ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் ‘புதுமையின் அடையாளம்’

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் ‘புதுமையின் அடையாளம்’

ஆரெம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் கலெக்ஷன் ஆகும்.
1856-ல் செயற்கை முறையில் சாயமிடுதல் அறிமுகப்படுத்தப்படும் வரை அனைத்து இழைகளும் இயற்கை முறையிலேயே சாயமிடப்பட்டு வந்தன.

செயற்கைச் சாயங்கள் வசதிய £கவும், செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் விரைவிலேயே அவை இயற்கை உட்பொருட்களுடன் கூடிய நிறமூட்டிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டன.

செயற்கைச் சாயங்கள் காரணமாக நச்சுக் கழிவுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுவது தற்போது கண்கூடாக அனைவராலும் உணரப்படுகிறது.

இயற்கைச் சாயங்கள் மற்றும் சாயத்தை பிணைக்கும் சாதனமான மோர் டன்ட்கள் ஆகியவற்றை உருவாக்கும் பண்டைய வழிமுறைகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. அல்லது சிறு குழுக்களில் உள்ள கைவினைஞர்கள் மட்டுமே பின்பற்றும் கலையாக இவை ஆகிவிட்டன.

தமிழ்நாட்டில் உள்ள ஆரெம்கேவி மையத்தில் நடத்திய பத்தாண்டு கால ஆராய்ச்சிக்குப் பின்னர், டஜன் கணக்கில் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்ததோடு, எங்கள் முயற்சியிலேயே பிரத்யேக நிறங்க ளையும் புதிதாக உருவாக்கி உள்ளோம்.

நேச்சுரல் கலெக்ஷன்ஸ் சேலைகள் மஞ்சிஸ்தா (இந்தியன் மேடர்) ஆகியவற்றில் இருந்து தருவிக்கப்பட்ட உயரிய சிகப்பு மற்றும் அம்பர் நிறச்சாயல்களைக் கொண் டுள்ளன.

கடந்த பத்தாண்டு காலத்தில் இப்போது முதன்முறையாக வாடிக்கையாளர்கள் இயற்கை முறையில் சாயமிடப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலை ஒன்றை வாங்கி தங்கள் கலெக்ஷனில் சேர்த்துக் கொண்டு இனி வரவிருக்கும் விழாக்காலத்தை சிறப் பாக கொண்டாட முடியும்.

ஆரெம்கேவி லினோ சேலைகள் என்பது லினோ தொழில்நுட்பம் மூலம் 40% எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலையாகும். பட்டுத்துணி நெசவில் லினோ தொழில்நுட்பத்திற்கான காப்புரி மையை ஆரெம்கேவி பெற்றுள்ளது.

மிக நேர்த்தியான பட்டுநூல் மற்றும் தூய்மையான சரிகை ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் இந்த அசல் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் காற்றுக்கு ஒப்பான இலேசான வடிவமைப்புடன் இருக்கும் வகையில் கைகளால் நெய்யப்பட்ட அற்பு தமான படைப்பாகும்.

ஆரெம்கேவி லினோ சேலைகள் தற்கால சந்ததி இளைஞர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.நேச்சுரல்ஸ் கலெக்ஷன்ஸ் சமீபத்திய புதுமைப்படைப்பாகும்.

இது நமது பாரம்பரிய, மதிப்பு வாய்ந்த சாயமிடும் வழிமுறைகளில் இருந்து மிகவும் ஆடம்பரமான, நீடித்து இருக்கக்கூடிய டிசைன்களை உருவாக்கி அளிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img