fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாதம் விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாதம் விழிப்புணர்வு முகாம்

உலக பக்கவாத தினத்தையொட்டி, “பக்கவாதம்: அதிர வைக்கும் உண்மைகள்” என்ற தலைப்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது.

தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் கே.அசோகன், நரம்பியல் நிபுணர் டாக்டர் கே.ராமதாஸ், தலைமை நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.முரளி, நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் சிறுதுவார மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.விக்ரம், நியூரோ மற்றும் வாஸ்குலர் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி நிபுணர் டாக்டர் பி.முத்துராஜன் ஆகியோர் பக்கவாதம் குறித்து நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பக்கவாதம் குறித்த அவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
வரும் நவம்பர் 5-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெறும் பக்கவாத சிறப்பு முகாமில் 25 சதவீத கட்டணச் சலுகையில் சீரற்ற ரத்த சர்க்கரை அளவு, கிரியேட்டினின், சராசரி ரத்த சர்க்கரை அளவு, ஈசிஜி, எக்கோ கார்டியோகிராம், கரோடிட் வெர்ட்டீபிரல் டாப்ளர், எம்.ஆர்.ஐ. ஸ்டோக் புரோக்கால் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

முகாமிற்கு வருபவர்கள் தங்களுடைய மருத்துவக் குறிப்புகள், மருந்து சீட்டுகள், காப்பீடு அட்டை ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

திடீரென கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி, திடீர் தலைச்சுற்றல், நடப்பதில் சிரமம், சமநிலை இழப்பு ஆகிய பாதிப்புகள் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

விவரங்களுக்கு 75020-33799, 89739-20000 ஆகிய செல்போன் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img