கோவை, துடியலூர் அருகே வட்ட மலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியும், ஆல்டஸ் சோலார் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மி நாரயணசுவாமி, ஆல்டஸ் சோலார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்.பத்மநாபன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா, துணை முதல்வர் டாக்டர் டி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக மாணவர்களுக்கு சோலார் பேனல் நிர்மாணிப்பது, அதனை தொடர்ந்து பாராமரிப்பது போன்ற பயிற்சிகளை அளிப்பதுடன் வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் தொடங்கு வதற்கு உண்டான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்