fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரியின் முன்னாள் மாணவர்களுக்குப் பாராட்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமைவகித்து, வரவேற்றார்.

இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களான ஏ.ஜெ.கே. கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற் றும் பாரதியார் பல்க லைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் அஜீத்குமார் லால்மோகன், பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் (பொ) முனைவர் வி.ஸ்ரீவித்யா, பெங்களூருவின் எம்.என்.சி. யில் பணியாற்றும் கே.ஆர் .லட்சுமி நரசிம்மன் ஆகியோருக்கு, முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் ‘எலைட் அலுமினி விருது’ வழங்கி கௌரவித்தார்.

முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் முனைவர் ஆர்.பிரபு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் முனைவர் ஜி. செந்தில்குமார், பொருளாளர் ஆர்.ஷோபனா மற்றும் சங்க நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img