கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் தூய்மைப் பணி நடைபெற்றது.
இப்பேரணியை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அலு வலர் சி.வி.ராம்குமார் கொடியசைத் துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் எஸ்.பிரகதீஸ்வரன், எஸ்.நாகராஜன், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச் சென்று சுற் றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகம், விடுதி வளாகம் ஆகிய இடங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.