Homeபிற செய்திகள்ஸ்ரீவி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்மார்ட் இந்தியா- ஹேக்கத்தான் 2022’ போட்டி

ஸ்ரீவி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்மார்ட் இந்தியா- ஹேக்கத்தான் 2022’ போட்டி

ஸ்ரீவி கலசலிங்கம் பல்கலையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் – (புதுமையான உற்பத்திகளும் யோசனைகளும்)- 2022, மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மத்திய அரசு புதிய கண்டுபிடிப புகள் குழுவும், ஏ.ஐ.சி.டிஇ புதுடில்லி ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த ஐந்து நாள் நிகழ்ச் சிகளின் நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் பல் கலை தலைவர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. பல்கலை துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த் முன்னிலை வகித்தார் பல்கலை பதிவாளர் முனைவர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் டி.வி.எஸ். நிறுவன துணைத் தலைவர் எஸ்.ராஜசேகரன் பேசுகையில், ஐந்து நாள் நிகழ்ச்சி இளைஞர்களை சுயதொழில் முனைவோர் களாக மாற்ற ஊக்கம் தருவதாகும் என்றார்.

பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன், சிறப்பு விருந்தினர் ஆகி யோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் கேட யங்களையும் வழங்கினர்.

மத்திய கல்வித் துறை, புதிய கண்டுபிடிப்புக் குழு, மையத்தலைவர் சாரிம் மோய்ன், பல்கலை கண்டுபிடிப்பு மைய இணை இயக்குநர் ஆகி« யார் பேசினர்.
அனைத்து மாநிலங்களி லிருந்தும் 22 குழுக்களாக 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பல்கலை சர்வதேச உறவு இயக்குநர் முனைவர் சரசு, கல்வித் துறை இயக்குநர் முனைவர் கோடீஸ்வரராவ், பேரா சிரியர்கள் மற்றும் ஆய் வாளர்கள் சுப்ரகாஷ் டேனி ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
மாணவர் எஸ்.இஸ்மா யில் வரவேற்றார். மாணவர் தேவன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img